ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை டாப் 7 ஹீரோக்களின் சம்பளம்.. 50 வருஷமா ஆட்சி செய்யும் வேட்டையன்

Kollywood top actors salary: டாப் ஹீரோக்கள் என்று வரிசைப்படுத்துபவர்கள் எல்லாம் அவர்களுடைய படங்களின் வெற்றியை பொறுத்து தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டமும் யார் நம்பர் ஒன் ஹீரோ என்பதை தீர்மானிக்கிறது.

ஆனால் சம்பள விஷயத்தில் யார் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள் என்பது வெகுவாக பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களாக இருக்கும் 7 பேரின் சம்பள விவரத்தை பற்றி பார்க்கலாம்.

50 வருஷமா ஆட்சி செய்யும் வேட்டையன்

ரஜினிகாந்த்: இப்போது இருக்கும் இளம் ஹீரோக்கள் பலரும் பயப்படும் ஒரு விஷயத்தை ரஜினி செய்து கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் வேட்டையன் மற்றும் கூலி படங்களில் பிசியாக இருக்கிறார். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் ரஜினியின் ரசிகர்கள் கூட்டம், சம்பளம் போன்றவற்றை யாராலும் முறியடிக்க முடியவில்லை. தற்போதைய நிலவரப்படி ஸ்டார் ஒரு படத்திற்கு 250 கோடி சம்பளமாக வாங்குகிறார்.

அஜித்குமார்: சம்பள விஷயத்தில் யார் முதலில் என்று விஜய் மற்றும் அஜித் இருவருக்கிடையே ரேஸ் நடந்து கொண்டிருந்தது. இதில் குட் பேட் அக்லி படம் மூலம் அஜித் விஜய்யை முந்திவிட்டார். அந்த படத்திற்காக அஜித் 165 கோடி சம்பளமாக பேசியிருக்கிறார்.

விஜய்: நடிகர் விஜய் லியோ படத்திற்காக 110 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். GOAT படத்திற்காக அவருக்கு 150 கோடி சம்பளமாக கொடுக்கப்படும் என வெகுவாக பேசப்படுகிறது. தளபதி 69 பட வேலைகள் உறுதியான பிறகு தான் விஜயின் சம்பளம் அடுத்த கட்டமாக எவ்வளவு உயர்கிறது என்பது தெரியும்.

கமலஹாசன்: உலகநாயகன் கமலஹாசனுக்கு விக்ரம் படத்திற்கு முன்புவரைக்கும் பெரிய அளவில் வசூலை வாரி குவித்த படம் என்று எதுவும் கிடையாது. இதனால் தான் அவர் சம்பள விஷயத்தில் விஜய் மற்றும் அஜித்திற்கு பின்னாடி இருக்கிறார். மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்கும் தக் லைப் படத்திற்காக கமல் 100 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

அனல் பறக்க வெளிவர காத்திருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள்

  • ரஜினிகாந்த் – வேட்டையன்
  • விஜய் – GOAT
  • அஜித் – விடாமுயற்சி
  • கமல் – இந்தியன் 2
  • சூர்யா – கங்குவா
  • தனுஷ் – ராயன்
  • சிவகார்த்திகேயன் – அமரன்

சூர்யா: மற்ற டாப் ஹீரோக்களை ஒப்பிடும் பொழுது சூர்யா இன்னும் பெரிய கணிசமான தொகை சம்பளத்தில் நடிக்கவில்லை. அவருடைய 44 ஆவது படத்திற்கு தான் 50 கோடி சம்பளத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். வளர்ந்து வரும் ஹீரோக்களை ஒப்பிடும்போது அவர்களை விட ஐந்து முதல் பத்து கோடி தான் இவர் அதிகமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்.

தனுஷ்: நடிகர் தனுசை நம்பி பணம் போட தயாரிப்பாளர்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு காத்திருக்கிறார்கள். இருந்தாலும் தனுஷ் தன்னுடைய சம்பளத்தை படிப்படியாகத்தான் உயர்த்துகிறார். 50 ஆவது படமான ராயனுக்கு 45 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன்: இந்த லிஸ்டில் தனுஷுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் இருக்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்டாடும் நாயகனாக இருப்பதால் இவருடைய மார்க்கெட்டுக்கு எந்த பாதிப்பும் இதுவரை இல்லை. இதனாலேயே சம்பளம் தாறுமாறாக உயர்கிறது. சமீபத்திய நிலவரப்படி சிவகார்த்திகேயன் 40 கோடி சம்பளமாக வாங்குகிறார்.

Trending News