செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கதையை மாற்ற சொன்ன ரஜினி.. போனி கபூர் உடன் இணையும் அசத்தல் கூட்டணி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கூடிய விரைவில் இப்படத்தின் அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பின் ரஜினி கதையை தேர்ந்தெடுப்பதில் கவனமாக உள்ளார். மேலும் ஜெயிலர் படத்தின் கதை ஒரு நாள் இரவில் நடக்கும் கதையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு அடுத்ததாக ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கு பின்பு டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் கூட்டணியில் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் ரஜினி இணைய முடிவு செய்துள்ளார்.

Also Read: மாஸ்டர் பிளான் போட்ட விஜய்.. சைலன்டாக நோட்டமிடும் ரஜினி, பற்றி எரியும் பிரச்சனை

இதனிடையே அண்மையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்தின் நடிப்பில் படம் தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது அஜித்தின் நடிப்பில் துணிவு படத்தை தயாரித்துள்ள போனி கபூர் படம் ரிலீஸாவதற்கு முன்பே கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார். அந்த படத்தின் ப்ரோமோஷன் பேட்டியின் போது ரஜினியுடன் இணைய உள்ள கூட்டணி பற்றி பேசினார்.

அப்போது, ரஜினி தனது மறைந்த மனைவி நடிகை ஸ்ரீதேவியின் நெரு ங்கிய நண்பர் என்பதால், நாங்கள் எப்போது சென்னை வந்தாலும் ரஜினியை குடும்பத்துடன் வீட்டிற்கு சென்று சந்திப்பது, வெளியில் சென்று வருவது என தனிப்பட்ட முறையில் நாங்கள் பல விஷயங்கள் பேசியதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் ஒரு கதையை தன்னிடம் கூறினார்.

Also Read: சென்சாரால் மீண்டும் துணிவுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. வசூலுக்கு வச்ச பெரிய ஆப்பு

அந்த கதையை ரஜினியிடம் சொன்னபோது கதையை சற்று மாற்றி அமைக்குமாறு தெரிவித்தாராம். இந்நிலையில் நாங்களும் கதையை மாற்றும் முயற்சியில் உள்ளதாக போனி கபூர் தெரிவித்தார். மேலும் என்னுடைய நேரம் வரும்பொழுது கட்டாயம் நான் ரஜினியுடன் கூடிய சீக்கிரத்தில் இணைவேன் என தெரிவித்த போனி கபூர், ரஜினி போன்ற நடிகர்கள் அடுத்தடுத்த 2,3 படங்களில் தொடர்ந்து கமிட்டாவது சாத்தியமில்லாதது என்றார்.

மேலும் பேசிய அவர் ஒரு வேளை இந்த ஆண்டு அல்லது அடுத்தடுத்த ஆண்டுகளில் கூட எங்களது கூட்டணி இணைய நான் ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாக தெரிவித்தார். ஏற்கனவே போனி கபூர் அஜித்துடன் மூன்று முறை இணைந்து வெற்றியை கொடுத்துவரும் நிலையில், கூடிய விரைவில் ரஜினியுடன் இணைய உள்ளதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Also Read: முதல் காட்சியிலேயே பல கோடிகள் ஆட்டையை போடும் திரையரங்குகள்.. வாரிசு, துணிவால் அழியும் கலாச்சாரம்

Trending News