Super Star Rajini: 72 வயதிலும் நான் தான் சூப்பர் ஸ்டார் என ரஜினி கெத்து காட்டும் வகையில் ஜெயிலர் திரைப்படம் அவருக்கு இமாலய வெற்றி பெற்று தந்துள்ளது. இதனால் ரஜினி மட்டுமல்ல ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளருமான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தலைகால் புரியாமல் சந்தோஷத்தை கொண்டாடி வருகிறார்
அதிலும் ரஜினிக்கு இப்போது BMW X7 காரை அவருடைய வீட்டு வாசலில் நிறுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவருக்கு மட்டுமல்ல படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு Porsche பிராண்ட் காரையும் பரிசளித்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரஜினிக்கு மட்டும் ரெண்டு காரை நிறுத்தி ரஜினியிடம் சாய்ஸ் கேட்கப்பட்டது.
இந்த விஷயத்தில் ரஜினி பணத்தை பார்க்காமல் எந்த காரை தேர்வு செய்தால் தனக்கு பிரச்சினை வராது என யோசித்து கில்லாடியாக முடிவெடுத்து இருக்கிறார். BMW x7 மற்றும் BMW i7 என்ற இரண்டு கார்கள் தான் ரஜினிக்கு சாய்ஸாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
BMW x7 ஒன்றரை கோடியும், அதைவிட BMW i7 இரண்டரை கோடியும் விலையுடையது. என்னதான் BMW x7- ஐ விட BMW i7 ஒரு கோடி அதிகம் என்றாலும் கோடிகளை எல்லாம் பார்க்காத ரஜினி எந்த காரை தேர்வு செய்தால் பிரச்சனை வராது என்பதை மனதில் வைத்துக் கொண்டு தடாலடியாக முடிவெடுத்துள்ளார்.
Also Read: ஜெயிலர் வேகத்தை குறைத்த குஷி.. முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்
BMW x7 பெட்ரோல் கார் டாப் எண்டு, BMW i7 டாப் எண்டு பேட்டரி கார். இது இரண்டரை கோடி. பேட்டரி கார் வாங்கி நான் பிரச்சனையில் சிக்க முடியாது. எனக்கு ஒன்றரை கோடி பெட்ரோல் காரை போதும் . என ரஜினி அதிரடியாக முடிவெடுத்து சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு ஷாக் கொடுத்தார்.
சமீப காலமாக பேட்டரி கார் மற்றும் பைக்குகள் உபயோகித்து பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இருப்பினும் அதில் ஒரு சில சிக்கல் ஏற்படுவதால் அதை வாங்க பாமர மக்கள் பயப்படுகின்றனர். ஆனால் கோடிகளில் புரலும் சூப்பர் ஸ்டாரும் பேட்டரி காரை வாங்குவதற்கு தயக்கம் காட்டிருப்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது. அவர் ஒரு விழிப்புணர்வுக்காக யாவது அந்த காரை வாங்கி இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.