வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கௌரவ குறைச்சலால் அதிரடியாக இறங்கிய ரஜினி.. ஆடிப்போன லைக்கா!

ஜெயிலர் திரைப்படத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி அடுத்து பல திட்டங்களை வைத்திருக்கிறார். எப்போதுமே சூப்பர் ஸ்டார் ஒரு படம் வெளியான பிறகு அடுத்த படத்தை பற்றி அறிவிக்க சில காலங்கள் எடுத்துக் கொள்வார். ஆனால் இந்த முறை அவர் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து கதைகளை கேட்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் தற்போது அவர் மூன்று திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் லைக்கா நிறுவனத்திற்கு அவர் இரண்டு படங்கள் நடித்துக் கொடுக்க இருக்கிறார். அதில் தான் தற்போது ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஏனென்றால் சமீப காலமாக ரஜினியின் நடிப்பில் படங்கள் ஓடாததால் அவர் தன்னுடைய சம்பளத்தை குறைத்து விட்டார் என்ற ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

Also read : சூப்பர் ஸ்டாரை சந்தோஷப்படுத்திய தனுஷ்.. பதிலுக்கு ரஜினி கொடுக்கும் சர்ப்ரைஸ்

ஆனால் அது உண்மைதான் என்ற ஒரு அதிகாரப்பூர்வமான செய்தியும் வெளிவந்தது. இப்பொழுது அதையெல்லாம் தூக்கி நிறுத்தும் அளவிற்கு வந்து விட்டார் சூப்பர் ஸ்டார். தற்போது லைக்கா நிறுவனத்திற்கு இரண்டு படங்கள் பண்ண போகும் ரஜினி அதற்காக எக்க சக்கமாக சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.

அந்த வகையில் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து சூப்பர் ஸ்டார் 250 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். இதில் ஜிஎஸ்டியும் அடக்கம். அதன் அடிப்படையில் சூப்பர் ஸ்டார் ஒரு படத்திற்கு 125 கோடி ரூபாய் வீத கணக்கில் இந்த சம்பளத்தை கேட்டிருக்கிறார். தலைவரின் இந்த அதிரடியை பார்த்து லைக்கா நிறுவன உரிமையாளர் ஆடித்தான் போயிருக்கிறார்.

Also read : காலா, கோச்சடையான் படங்களால் வந்த வினை.. டாட்டா போட்டு தலைதெறிக்க ஓடும் ரஜினி

ஆனால் எப்படியும் படம் மிகப்பெரிய அளவில் லாபம் பார்த்து விடும் என்ற நோக்கில் அவர் அதற்கு சம்மதமும் தெரிவித்து இருக்கிறார். ஏனென்றால் தற்போது லைக்கா நிறுவனம் மணிரத்னத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாறு காணாத அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.

அதன் மூலம் லைக்காவுக்கு பல கோடி லாபமும் கிடைத்திருக்கிறது. அதனாலேயே மணிரத்தினம் மற்றும் ரஜினி கூட்டணியில் அடுத்ததாக படம் தயாரிக்க முன்வந்துள்ளது. இந்தக் கூட்டணி நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதால் லைக்கா நிறுவனமும் தயங்காமல் ரஜினிக்கு கோடிகளை வாரி வழங்கியுள்ளது.

Also read : இதுவரை ரஜினி செய்யாத காரியம்.. சூப்பர் ஸ்டாரான பிறகு முதன்முதலாக சென்னையில் நடக்கும் அதிசயம்

Trending News