வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கேப்டன், கமல் மாதிரி வெற்றி வேண்டும் என முயற்சித்து ரஜினிக்கு பெயர் கிடைக்காத படம்.. சூதானமா யோசிச்சாலும் சட்ட கிழிஞ்சது தான் மிச்சம்

Kamal-Vijayakanth: படத்தில் எந்த கதாபாத்திரம் ஏற்கிறோம் என்பது முக்கியமில்லை, அந்த கேரக்டருக்கு தகுந்தவாறு கெட்டப், முக அம்சம், தோரணை ஆகியவை இருந்தால் தான் அப்படம் மக்களிடையே வெற்றி பெறுகிறது. இதற்கு உதாரணமாய் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர்கள் கேப்டன் மற்றும் கமல். இவர்களைப் போலவே முயற்சித்து வேலைக்காக ரஜினி படம் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

இந்நிலையில் இவர்கள் ஒவ்வொருவரும் தன்னுள் இருக்கும் தனி திறமைகளை கொண்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர்கள். இந்நிலையில் கமல் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் தான் தேவர் மகன். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

Also Read: எங்க சிங்கத்தை அசிங்கப்படுத்திட்டியே நெல்சா.. ஜெயிலர் வீடியோவை பார்த்துட்டு கொத்து பரோட்டா போட்ட பயில்வான்

அதிலும் குறிப்பாக கமலின் கெட்டப் படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்திருக்கும். அவ்வாறு இந்த படம் ரிலீஸ் ஆன போது மவுண்ட் ரோடு, தேவி தியேட்டர், எல்ஐசி வரைக்கும் இப்படத்தை காண க்யூ இருந்ததாக மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் இதே போன்று விஜயகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றியை தந்த படம் தான் சின்ன கவுண்டர். மக்களின் அபிமானத்தைப் பெற்று நல்ல விமர்சனங்களோடு போற்றப்பட்டது. தொடர்ந்து இது போன்ற கெத்தான கதாபாத்திரங்கள் இடம் பெற்ற படங்கள் வெற்றியை தந்தது.

Also Read: 10 முறை கருக்கலைப்பு, பிள்ளைகளுக்காக செய்த அந்தரங்க தொழில்.. தப்புன்னு தெரிஞ்சும் தறிக்கெட்டு திரியும் பிரபலம்

இதைப் பார்த்துவிட்டு தான் சின்ன கவுண்டர் படம் எடுத்த இயக்குனர் ரஜினியை வைத்து படம் உருவாக்க ஆசைப்பட்டு, எடுத்த படம் தான் எஜமான். ரஜினி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும், இப்படத்தில் இடம்பெற்ற வானவராயன் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.

இதற்கு காரணம், இக்கதாபாத்திரத்திற்கு ஏற்ற கம்பீரமும் கண்ணியமும் இல்லாததனால் ரஜினிக்கு இப்படம் பெரிதளவு கை கொடுக்கவில்லை. இருப்பினும் இப்படம் 70வது இடங்களில் வெளிவந்து 100 நாள் ஓடி வணிக ரீதியாய் வெற்றியை கண்டது.

அவ்வாறு கமல், விஜயகாந்த் இடம் இருந்த அந்த கம்பீர தோற்றம் ரஜினி இடம் குறையாக பார்த்ததன் காரணமாகத்தான் இக்கதாபாத்திரத்தில் ரஜினியின் பெயர் பெரிதளவு பேசப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் எதிர்நீச்சல் குணசேகரன்.. அடேங்கப்பா ஆணாதிக்கத்திற்கு ஜாஸ்தி தான்

Trending News