சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் கபாலி மற்றும் காலா படங்கள் வெளியாகின. ஆனால் இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு பிடித்தா என்றால் கேள்விக்குறிதான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முதலில் பா ரஞ்சித் உடன் இணைந்து பணியாற்றிய திரைப்படம் கபாலி. நெருப்புடா பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான கபாலி படத்திற்கு மிகப் பெரிய விளம்பரத்தை செய்து எப்படியோ வசூல் பெற வைத்து விட்டார் கலைப்புலி எஸ் தாணு.
கபாலி படத்தைக் கூட ஓரளவுக்கு கமர்ஷியல் படமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதன் பிறகு வெளிவந்த காலா திரைப்படத்தின் கதி என்ன ஆனது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தப் படத்தோடு தயாரிப்பு நிறுவனத்தையே இழுத்து மூடிவிட்டார் தனுஷ்.
காலா படத்தால் பட்ட கடனை தற்போது ஒரு கம்பெனிக்கு மூன்று நான்கு படங்கள் ஒரே நேரத்தில் செய்து கட்டி வருகிறார் தனுஷ். மேலும் கபாலி படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஏன் காலா படத்திற்கு கிடைக்கவில்லை என்ற யோசனையில் ரஜினி இருந்துள்ளார்.
மேலும் இது குறித்து விசாரிக்கையில், எப்போதுமே ரஜினியின் படங்களுக்கு குடும்பம் குடும்பமாக வரும் ரசிகர்கள் பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றிய படங்களில் மிஸ்ஸிங் எனவும் தியேட்டர்காரர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும் காலா படத்திற்கெல்லாம் ரஜினி ரசிகர்களைத் தவிர யாருமே வரவில்லை எனவும் விசாரிக்கையில் தெரிந்து கொண்டாராம் ரஜினி.
மேலும் பா ரஞ்சித் எடுக்கும் படங்களுக்கு ஒரு குறிப்பிட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சுத்தமாக படங்களை பார்க்காமல் இருக்கின்றனர் என்பதையும் தெரிந்து கொண்டாராம் ரஜினிகாந்த். இதனால் தன்னுடைய வட்டாரங்களில் பா ரஞ்சித்தால் தான் தன்னுடைய மார்க்கெட் ஆட்டம் கண்டது எனக் கூறி வருத்தப்பட்டதாக பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். உண்மையில் ரஜினி தான் இப்படி சொன்னாரா, இல்லை வழக்கம்போல் பயில்வான் மிகைப்படுத்தி பேசிவிட்டாரா என்பதுதான் தற்போதைய கேள்வி.