வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ரஜினியை சங்கடத்தில் தள்ளிய கமர்ஷியல் இயக்குனர்.. பட டைட்டிலால் வந்த வினை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் தன்னுடைய அடுத்த பட டைட்டில் மூலம் சங்கடப்படுத்தி உள்ளதுதான் செய்தியாக கிடைத்துள்ளது.

ரஜினி மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான தர்பார் படத்தை தலைவர் ரசிகர்கள் மறப்பதற்கு நீண்ட காலமாகும். அந்தளவுக்கு அந்த படம் பலரையும் நோகடித்துள்ளது.

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. இதனால் தற்போது ஸ்டைலிஸ் ஆக்சன் படங்களைத் தவிர்த்து விட்டு தற்போது பக்கா கிராமத்து கமர்ஷியல் கதையில் சிறுத்தை சிவா கூட்டணியில் அண்ணாத்த வருகிறார்.

இந்த படத்தின் புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் ரஜினியின் பெயரை அடுத்த படத்திற்கு டைட்டிலாக வைத்து அவரை சங்கடப்படுத்தியுள்ளார் இயக்குனர் வெங்கடேஷ்.

விஜய்க்கு பகவதி படத்தை கொடுத்தவர் தான் ஏ வெங்கடேஷ். அது மட்டுமில்லாமல் பல கமர்ஷியல் படங்களையும் இயக்கியுள்ளார். நடிகராக அங்காடித்தெரு படத்தில் கருங்காலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்கடேஷ் ரஜினி என்ற டைட்டிலில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். ஏற்கனவே ரஜினி பெயரில் பல குளறுபடிகள் நடந்து வருவதால் அந்த படத்திற்கு ரஜினி பெயரை வைத்துள்ளது அவரது குடும்பத்தினரை மிகவும் சோதித்துள்ளதாம். கண்டிப்பாக ரஜினி என்ற டைட்டிலுடன் அந்த படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டார்கள் என்ற கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

A-venkatesh-cinemapettai
A-venkatesh-cinemapettai

Trending News