சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வேட்டையன் முதல் நாள் கலெக்ஷன் எதிர்பார்ப்பு.? சூப்பர் ஸ்டாருக்கு கிடைக்குமா மாஸ் ஓபனிங்

Vettaiyan first collection prediction: ரஜினியின் நடிப்பில் உருவாக்கி உள்ள வேட்டையன் படம் என்ற தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. தளபதி விஜய், தனுஷ் போன்ற பெரிய நடிகர்கள் தியேட்டருக்கு சென்ற முதல் நாளே ரஜினியின் படத்தை பார்த்திருக்கின்றனர். எப்போதுமே தலைவருக்கென்று ஒரு மாஸ் ஆடியன்ஸ் இருக்கின்றனர்.

இந்த சூழலில் ஜெய்பீம் போன்ற அற்புதமான படத்தை கொடுத்த டிஜே ஞானவேல் ரஜினிக்கு வேட்டையன் என்ற நல்ல படத்தை கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதுவும் ரஜினி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் வேட்டையன் படம் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் மொத்த கலெக்ஷன் 500 கோடி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினியின் வேட்டையன் படத்தை லைக்கா சுபாஸ்கரன் தான் தயாரித்திருக்கிறார்.

ரஜினியின் வேட்டையன் முதல் நாள் வசூல் எதிர்பார்ப்பு

வேட்டையன் படத்திற்கு 9:00 மணி காட்சிக்கு அரசு அனுமதி வழங்கியது. அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதால் படத்தின் வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ரீ புக்கிங்கிலே வேட்டையன் படம் 8 கோடி வசூல் செய்திருந்தது.

மேலும் முதல் நாள் எப்படியும் 80 கோடிக்கும் அதிகமாக வேட்டையன் படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சிறந்த ஓப்பனிங் ஆக இந்தப் படம் அமைய இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

விஜய்யின் கோட் படம் கடந்த மாதம் வெளியான நிலையில் முதல் நாளே 126 கோடி வசூல் செய்திருந்தது. அதன் பட்ஜெட் அதிகம் என்பது மட்டுமல்லாமல் அதிக திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆனால் ரஜினியின் வேட்டையன் படம் என்பது கோடி வசூல் செய்தாலே நல்ல ஓப்பனிங் ஆக தான் அமையும்.

Trending News