தமிழ் சினிமாவைப் பொருத்தவரை திரையரங்கில் ரிலீஸாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் வசூலை அள்ளிய நிறைய தமிழ் படங்கள் உள்ளது. ஆனால் அதைத்தாண்டி வார நாட்களான திங்கட் கிழமையிலும் தமிழகத்தில் வசூல் சாதனை படைத்த நான்கு படங்களை தற்போது பார்க்கலாம்.
பிகில் : பாக்ஸ் ஆபிஸின் வசூல் நாயகனாக பார்க்கப்படும் இளையதளபதி விஜய் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் 180 கோடி பொருட் செலவில் எடுக்கப்பட்டு 300 கோடி வசூலைக் குவித்தது. இந்த படம் சனி ஞாயிற்றுக்கிழமை தவிர வார நாட்களிலும் தமிழகத்தில் 1.75 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் சாதனை புரிந்தது.
2.0: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான 2.0 திரைப்படம் உலக அளவில் வசூல் வேட்டையாடியது. 540 கோடி பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் மொத்தம் பாக்ஸ் ஆபிஸில் 750 கோடியை எட்டியது. அதிலும் சிறப்பு என்னவென்றால் வார நாட்களான திங்கட்கிழமையும் கூட இந்த படம் தமிழகத்தில் 1.32 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது.
பாகுபலி 2: பிரபாஸ் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் தெலுங்கு, தமிழ் மொழிகளில் 250 கோடியில் தயாரிக்கப்பட்டு உலக அளவில் 1,573 கோடி பாக்ஸ் ஆபிஸ் பெற்றது. மேலும் இந்த படம் ஞாயிற்றுக்கிழமையில் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது போல் வார நாட்களான திங்கட் கிழமையிலும் தமிழகத்தில் மட்டும் 1.10 கோடி வசூல் சாதனை புரிந்தது.
விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நான்கு வருடங்களுக்குப் பின் திரையில் தோன்றிய விக்ரம் படம் தற்போது திரையரங்கில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் இதுவரை கமல் நடித்த மற்ற படங்களை காட்டிலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து பாக்ஸ் ஆபீஸ் ஜாம்பவான்களாக பார்க்கப்படும் ரஜினி, விஜய் வரிசையில் கமலையும் இடம்பெற வைத்திருக்கிறது.
விக்ரம் திரைப்படம் திரைக்கு வந்த ஏழு நாட்களுக்குள்ளேயே 200 கோடி வசூலை உலக அளவில் இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் மட்டும் வார நாட்களான திங்கட்கிழமையில் 1.09 கோடி வசூல் செய்து மிரள வைத்திருக்கிறது. இப்படி விடுமுறை தினமான சனி ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களிலும் இந்த நான்கு படங்களும் வசூல் சாதனை படைத்திருப்பது ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் தான்.