வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நடிகர் சங்கத்திற்கு பணம் தர யோசிக்கும் ரஜினி.. வாய் வார்த்தையுடன் நிறுத்திக் கொண்ட விஷால்

Vishal – Rajini : நடிகர் சங்க கட்டிடம் கட்ட பல காலமாக ஏற்பாடு செய்தும் தற்போது வரை கட்ட முடியாமல் உள்ளது. அதுவும் விஷால் இந்த நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு மேலும் இப்படியே விட்டால் கட்டிடம் கட்ட முடியாது என வங்கியில் லோன் வாங்கி கட்டலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

ஆனால் அப்படி பணம் வாங்கினால் மாதம் மாதம் பணத்தை கட்ட வேண்டும். ஆகையால் ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழக அரசிடம் இருந்து பேசி வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கின்றனர். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இது இல்லாமல் வேறு ஒரு திட்டமும் வைத்திருக்கிறார்களாம்.

அதாவது இப்போது சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் 30 நடிகர்களிடம் ஒரு கோடி வாங்கி அதை டெபாசிட் செய்யப் போகிறார்களாம். மேலும் இதிலிருந்து வரும் வட்டியை மாதம் கட்டி விடலாம் என்று யோசித்து வைத்துள்ளனர். இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்திருக்கிறது.

Also Read : அயோத்தி பக்கம் அத்தனை கோடிகளை வளைத்த அமிதாப்.. ரஜினி முதல் இப்பவே வளைக்கப்படும் விஐபிகள்

இதில் சில நடிகர்கள் ஒற்றுக்கொண்ட நிலையில் ரஜினி மற்றும் விஷால் மட்டும் இன்னும் ஒப்புதல் தரவில்லையாம். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் சங்கத்திற்கு பணம் தர யோசிப்பது இப்போது சர்ச்சை ஆகி இருக்கிறது. அதோடு விஷால் நடிகர் சங்கம் கட்டிய ஆக வேண்டும் என்று ஜம்பமாக பேசியிருந்தார்.

இதற்காக விஷால் ஒரு துரும்பை கூட நகர்த்தவில்லை என்று தான் கூறி வருகிறார்கள். விஷால் போற இடமெல்லாம் வாய் வார்த்தை உடன் நிறுத்திக் கொண்டு நடிகர் சங்கத்திற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லையே என்று விமர்சனங்கள் தான் எழுகிறது. இதற்குப் பிறகு நடிகர் சங்கம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது விரைவில் தெரியவரும்.

Also Read : LCU கேள்விப்பட்டிருக்கோம் அது என்ன NCU? ரஜினிகாந்த் ஓகே சொல்லி பற்ற வைத்த நெருப்பு

Trending News