திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திடுதிப்புன்னு உள்ளே புகுந்த ரஜினி.. காட்டிய மின்னல் மேஜிக்கில் அரண்டு போன படக்குழு

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. நெல்சன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆதித்யா ராவ் ஸ்டுடியோவில் மிகவும் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதில் சூப்பர் ஸ்டாரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

அதே இடத்தில் தான் சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் போன்றவை நடைபெறுகின்றது. ஷாருக்கான் படம் சூட்டிங் நடைபெறுவதை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அங்கு சென்று இருக்கிறார்.

Also read:தம்பிகளுக்காக ஹீரோ தியாகம் செய்து நடித்த 5 படங்கள்.. சென்டிமென்டில் அசத்திய ரஜினி

சொல்லாமல் கொள்ளாமல் இப்படி திடுதிப்பென்று என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டாரை பார்த்து பட குழுவே அரண்டு போய்விட்டதாம். அங்கு வந்த ரஜினி ஷாருக்கான் உட்பட அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பேசியபடி சிறிது நேரம் சூட்டிங்கை பார்த்துவிட்டு சென்றாராம்.

இப்படி மின்னல் போல் வந்து ஒரு மேஜிக் காட்டிவிட்டு அனைவரிடமும் கை கொடுத்த படி சென்ற சூப்பர் ஸ்டாரை ஒட்டுமொத்த பட குழுவினரும் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறார்கள். ஷாருக்கான் மற்றும் ரஜினி இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

Also read:அஜித், விஜய், கமலுடன் ஜோடி போட்ட பிரபல நடிகை.. சூப்பர் ஸ்டாருடன் மட்டும் கிடைக்காத வாய்ப்பு

அதனால் தான் அவர் ஷாருக்கான் பட சூட்டிங் நடக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே சென்று பார்த்திருக்கிறார். அதேபோன்று ஷாருக்கானும் ஜெயிலர் பட சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று ரஜினிகாந்தை பார்த்து நட்பு பாராட்டி இருக்கிறார். இப்படி இவர்கள் இருவரும் அன்புடன் பேசிக்கொண்டிருந்ததை பற்றி தான் தற்போது பலரும் ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.

இதுதான் ரஜினியிடம் அனைவருக்கும் பிடித்த குணம். முன்னணி நடிகர்களாக இருக்கும் சிலர் அருகருகே படப்பிடிப்பு நடந்தால் கூட போட்டி மனப்பான்மையின் காரணமாக சந்தித்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி இருக்கும் இந்த சினிமா துறையில் ரஜினிகாந்த் மட்டும் அனைவரிடமும் இயல்பாக நட்பு பாராட்டி வருகிறார்.

Also read:200 மடங்கு எனர்ஜியுடன் களத்தில் நிற்கும் ரஜினி.. வாரிசுகளால் வந்த விடிவு காலம்

Trending News