ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றதால் ஒரு ஹிட் படத்தை கொடுக்க ரஜினி மும்மரமாக செயல்பட்டு வருகிறார்.
ஆனால் சில வருடங்களாகவே ரஜினி ஒரு விதமான மன உளைச்சலில் இருந்து வருகிறார். காரணம் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தான். சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி இணையத்தில் வெளியாகி பூதாகரமாக வெடித்திருந்தது.
Also Read : ஜெயிலர் படத்தில் இருக்கும் 2 முக்கிய கேரக்டர்கள்.. ரஜினிக்கு இணையாக இருக்கும் பவர்ஃபுல் கதாபாத்திரங்கள்
தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்குள் இருந்த பிரச்சனை பெரிதாகி விவாகரத்து வரை சென்றதால் ரஜினி எவ்வளவோ பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் முடிந்த பாடில்லை. இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க உறவினர்கள், ரசிகர்கள் முயற்சி செய்தனர்.
ஆனால் இவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தனர். ஆனால் தனுஷ் தனது பிள்ளைகளின் பாசத்தால் தவித்துள்ளார். இதனால் இந்த தம்பதியினர் ஒன்றாக சேர்ந்துள்ளனர். அதாவது ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா மூவரும் ஒன்றாக சேர்ந்து பேசி உள்ளனர்.
Also Read : மொத்தமாக சொரிஞ்சுவிட்ட செல்வராகவன், தோல்விக்கு இதான் காரணம்.. தனுஷ் ரசிகர்கள் கூட கொண்டாடாத நானே வருவேன்
ஐஸ்வர்யா, தனுஷ் இருவருக்கும் ரஜினி சில அறிவுரைகள் கூறியுள்ளார். இதை கேட்டு தனுஷ் மனம் மாறி உள்ளாராம். அதுமட்டுமின்றி இனிமேல் இதுபோல் பிரச்சினைகள் இருக்காது என்று தனது மாமாவிடம் தனுஷ் சொல்லியுள்ளார். ஐஸ்வர்யாவும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
இதுவரை ரஜினிக்கு பெரும் தலைவலியாக இருந்த இந்த பிரச்சனை தற்போது சுமுகமாக முடிந்துள்ளது. மேலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் இணைந்து வாழ போவதாக விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதை அறிந்த தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Also Read : தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நடந்த திடீர் சந்திப்பு.. விவாகரத்து முடிவுக்கு முற்றுப்புள்ளியா?