நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ் சினிமாவின் மேன்மைக்காக என்றும் முயற்சித்து வரும் கலைஞன் தான் கமல். இவர் ஒரு துருவம் என்றால் மறு துருவமாய் மக்கள் நெஞ்சில் நீங்காத நம்பிக்கையின் பாத்திரமாக விளங்குபவர் தான் ரஜினி. அவ்வாறு இருக்கையில் ஒரே ஒரு விஷயத்தால் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதால், கமலின் மார்க்கெட் சரிந்தது என்பது ஆச்சரியத்தை உண்டுபடுத்தி வருகிறது.
அக்காலம் முதல் இக்காலம் வரை இவர்களுக்கு என்று தனித்தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. மக்களை பொறுத்தவரை இவர்கள் இருவரின் படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். கமலைப் பொறுத்தவரை தன்னை ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி அதன் பின் படிப்படியாக சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தன்னை புதுப்பித்துக் கொண்டவர்.
Also Read: 90-களில் ரஜினிக்கு பயத்தை காட்டிய 2 நடிகர்களின் சம்பளம்.. ஒன்னுக்கு ஒன்னு சலச்சது இல்ல
மேலும் தான் நினைத்ததை செய்தே தீரும் மனப்பக்குவம் கொண்டவர். அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது தெரிந்த ஒன்றுதான். இவர் இயக்கிய, தயாரித்து மற்றும் நடித்து வெளிவந்த படங்கள் சூப்பர் ஹிட் மற்றும் பிளாக் பாஸ்டர் கொடுத்தது என்பது நாம் அறிந்து ஒன்றே. மேலும் இவரின் இத்தகைய அர்ப்பணிப்பு மக்களால் உலகநாயகன் என்ற பெயரை பெற்று தந்தது.
இவரிடம் கொடுக்கும் எந்த கதாபாத்திரமானாலும் அதை இறங்கி கலக்குவதில் வல்லவர். இத்தகையவர் ஒரே ஒரு விஷயத்தால் ரஜினியை விட பின் தங்கி இருப்பது இன்று வரை புரியாத புதிராக இருந்து வருகிறது. ரஜினியை பொறுத்தவரை தன் சினிமா பயணத்தை வில்லனாக ஆரம்பித்தவர். அதன்பின் இவரின் ஸ்டைலுக்கு மக்கள் தன் நெஞ்சில் இடம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
அவ்வாறு தன் இயல்பான தோற்றத்தாலும் மற்றும் நடிப்பாலும் சினிமாவில், புகழின் உச்சிருக்கு சென்றவர் ரஜினி. இவரின் 99% படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து கமலுக்கும் ரஜினிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை பார்க்கும் பொழுது ரஜினியின் படங்கள் ஒரு பக்கா எண்டர்டெயின்மென்ட் பேக்கேஜ் ஆக இருக்கும். ஆனால் கமல் படங்களை பொறுத்த வரை சூப்பர் ஹிட் படங்களாக மட்டும் தான் இருக்கும்.
அதிலும் ரஜினி தன்னை ஒரு நகைச்சுவை நடிகராகவும் நிரூபித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகம் முழுக்க இருக்கும் மக்களிடையே நல்ல அபிப்பிராயத்தை பெற்று அன்றும் இன்றும் நேஷனல் சூப்பர் ஸ்டாராய் இடம்பெற்று வருகிறார். இந்த ஒரு விஷயம் தான் கமலின் மார்க்கெட்டை குறைத்தது என்றே கூறலாம். இருப்பினும் இவருக்குரிய மவுசு என்றும் குறையாது என்பதும் நமக்கு தெரிந்த ஒன்றுதான்.