திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூர்யா பட இயக்குனரை வளைத்து போட்ட ரஜினி.. தேசிய விருதுக்காக போட்டிருக்கும் பலே திட்டம்

நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதுமே ரஜினி ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்திற்கான அப்டேட் கொடுப்பார்.

ஆனால் இப்போது வரிசையாக அவருடைய அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பிரமாண்டமாக லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருக்கிறது.

Also Read : இப்ப அஜித் இல்ல, ரஜினி ரசிகர்களை சீண்டி விட்ட தயாரிப்பாளர்.. வாரிசு மேடையில் வேண்டாத பேச்சு

மேலும் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினி நடிக்கிறார். இப்போது ரஜினியின் அடுத்த படத்திற்கான தகவல் அரசல் புரிசலாக வெளியாகி உள்ளது. அதாவது சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை இயக்கியவர் டி ஜே ஞானவேல்.

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட ஜெய் பீம் படத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பாராட்டு கிடைத்தது. இப்போது ரஜினியிடம் ஞானவேல் ஒரு கதை கூறியுள்ளார். அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்த போனதால் கண்டிப்பாக தேசிய விருது பெரும் அளவிற்கு இந்த படம் இடம்பெறும் என்ற கணித்துள்ளாராம்.

Also Read : மகள் முறை பிரபலத்தை ஜோடியாக நடிக்க கேட்ட ரஜினி.. அதிர வைக்கும் முத்து பட மீனாவின் சீக்ரெட்

சூப்பர் ஸ்டார் வரலாற்றில் கண்டிப்பாக தேசிய விருது இடம்பெற வேண்டும் என்பதற்காக ரஜினி ஞானவேலை லாக் செய்து வைத்துள்ளார். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையா அல்லது சூப்பர் ஸ்டாருக்கு எழுதப்பட்ட கதையா என்பது விரைவில் தெரியவரும்.

மேலும் ரஜினிக்கு வயது ஆகிக்கொண்டே இருப்பதால் சீக்கிரமே நிறைய படங்களை புக் செய்து அடுத்தடுத்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் பல இளம் இயக்குனர்கள் இடம் இருந்து ரஜினி கதை கேட்டு வருகிறாராம். தனக்கு அந்த கதை பிடித்திருந்தால் உடனே ஓகே சொல்லி கமிட்டாகி விடுகிறார்.

Also Read : திருட்டு சிடி வழக்கில் மாட்டிவிட்ட கமல்.. தயாரிப்பாளரை கூப்பிட்டு பாராட்டிய ரஜினி

Trending News