திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நிற்கதியாக நின்ற சரத்பாபுவின் மனைவி.. சரியான நேரத்தில் உதவிய சூப்பர் ஸ்டார்

Rajini: விஜயகாந்த் தன்னிடம் உதவி கேட்டால் தன்னால் முடிந்தவரை எது வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். இது சினிமாவில் உள்ளவர்கள் தாண்டி ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த விஷயம்தான். அதேபோல் தான் ரஜினியும் நிற்கதியாய் நின்ற பலருக்கு வாழ்வு தந்திருக்கிறார். ஆனால் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பது போல ரகசியமாக வைத்துக் கொள்வார்.

ஆனால் அதையும் மீறி உதவி செய்தவர்கள் அதற்கு நன்றி கடனாக அவர் செய்த விஷயங்களை மீடியாவில் கூறி வருகிறார்கள். அப்படிதான் சரத் பாபுவின் மனைவிக்கு ரஜினி செய்துள்ள உதவி இப்போது வெளியாகியுள்ளது. அதாவது சரத்பாபு மற்றும் ரஜினி இருவருமே நெருங்கிய நண்பர்கள்.

Also Read : ரஜினி, கமல் படங்களில் எங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது.. சாய் பல்லவி போல் தெரிந்து ஓடும் 5 ஹீரோயின்கள்

பெரும்பாலும் ரஜினியின் படங்களில் சரத்பாபு நண்பராகத்தான் நடித்திருப்பார். இந்நிலையில் சரத்பாபுவின் முதல் மனைவி பிரபல நடிகை ரமா பிரபா. இவர்கள் இருவருக்கும் 1971 இல் திருமணம் ஆன நிலையில் 1988 இல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

ஒரு காலத்தில் சினிமாவில் உச்சத்தில் இருந்த ரமா பிரபா ஊருக்கு செல்ல பேருந்திற்கு பணம் கூட இல்லாமல் நிற்கதியாக நின்று இருக்கிறார். அப்போதுதான் ரஜினியின் ஞாபகம் இவருக்கு வந்திருக்கிறது. சரத்பாபு உடன் அவர் இருந்த நேரத்தில் ரஜினி இடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவரிடம் போய் உதவி கேட்டிருக்கிறார்.

Also Read : அச்சு அசல் ரஜினி போல் இருந்த பாக்யராஜ் பட நடிகர்.. மூக்கு, ஹேர் ஸ்டைல் என அப்படியே சூப்பர் ஸ்டார் தான்

அந்தச் சமயத்தில் தான் ஒரு படத்திற்கான அட்வான்ஸ் தொகை 40 ஆயிரத்தை ரஜினி வாங்கி இருக்கிறார். ரமா பிரபாவின் நிலைமையை பார்த்து பரிதாப பட்ட ரஜினி உடனே அந்த பணத்தை அப்படியே எடுத்துக் கொடுத்து விட்டாராம். இவ்வளவு தொகை தனக்கு வேண்டாம் என்று ரமா பிரபா கூறியிருக்கிறார்.

ஆனால் ரஜினி வலுக்கட்டாயமாக அந்த பணத்தை அவரிடம் கொடுத்தாராம். அதன் பிறகு தனது சொந்த ஊரான மதனப்பள்ளிக்கு சென்று தொழில் தொடங்கி நல்ல நிலைமையில் ரமா பிரபா இருந்தார். நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

Also Read : கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்.. திருப்பி அடித்த கர்மா

Trending News