அந்த நடிகையின் முன் அசிங்கப்படுத்திய ரஜினி.. ஈகோவால் இப்ப வர விரோதியாகவே இருக்கும் சத்யராஜ்

80ஸ் காலகட்டங்களில் ரசிகர்களின் ஸ்டைலிஷ் மன்னனாக இருந்தவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரின் ஹேர் ஸ்டைலுக்காகவே இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தனர். எப்பொழுதும் துருதுருவென இருக்கும் ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் பயங்கர கலாட்டாக்கள் செய்வாராம்.

அப்பொழுது இவருக்கு இணையாக வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் தான் சத்யராஜ். இவர்கள் தம்பிக்கு எந்த ஊரு என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக மாதவி நடித்துள்ளார். அப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் நடிகையிடம் சத்யராஜை பற்றி கிண்டலாக பேசியுள்ளார். புதிதாக லண்டனில் இருந்து வந்த ப்ரொபசர் இவர்தான் எல்லாருக்கும் நன்றாக நடிப்பு கற்றுத் தருவார் என்று மாதவியிடம் கிண்டலாக கூறியுள்ளார்.

Also Read: உன்னோட யுனிவர்ஸ்ல எனக்கு ஒரு கதை எழுது.. இயக்குனருக்கு கட்டளையிட்ட ரஜினி

இதனை உண்மை என நம்பிய நடிகை மாதவி சத்யராஜிடம் வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொண்டார். ஒரு நடிகையின் முன் தன்னை அசிங்கப்படுத்தி விட்டார் என்பது போலவும் எப்படி என்னை பற்றி இப்படி பேசலாம் என்று அவரின் மேல் ஈகோ வந்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் இவர்களின் காம்போ மிஸ்டர் பாரத் படத்திலும் இணைந்தது. பட குழுவானது ஏற்கனவே இவர்களுக்குள் இருந்த ஈகோவை மீண்டும் தூண்டி விடுவது போல ஒரு செயலை செய்துள்ளனர். அதாவது, இந்த படம் 3 மணி நேரம் ஓடக்கூடிய பெரிய படமாக இருப்பதால் சத்யராஜ் நடித்த சில காட்சிகளை மட்டும் படத்திலிருந்து நீக்கி உள்ளனர்.

Also Read: கேட்டாலே கொடுத்திருப்பேன்.. அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்து அதிருப்தியில் ரஜினி

இந்நிலையில் மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியை விட சத்யராஜின் கதாபாத்திரம் தான் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அன்றைய சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் ரஜினி தான் வசூல் மன்னனாக திகழ்ந்து வந்தார். அதனால் இவர் நடித்த காட்சிகளில் கை வைக்காமல் சத்யராஜ் நடித்த பாதி காட்சிகளை மட்டும் படக்குழு நீக்கியுள்ளது.

ஆனால் படத்தில் அவரை விட நான் நன்றாகவே நடித்துள்ளேன் என்றும்  நான் நடித்த காட்சிகளை நீக்கியதற்கு ரஜினிதான் முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார். இந்த இரண்டு படங்களின் மூலம் இவர்களுக்குள் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் ஈகோவாக மாறி  உள்ளது. இந்நிலையில் சினிமா துறையை பொருத்தவரையிலும் இவர்கள் வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் இன்றுவரையிலும் விரோதிகளாகவே இருந்து வருகின்றனர்.

Also Read: அசைவம் சாப்பிட்டால் சீக்கிரம் இறந்து விடுவோமா.? வாய கொடுத்து புண்ணாக்கி கிட்ட சூப்பர் ஸ்டார்