வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யா பட வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய ரஜினி.. உறுதியான அடுத்த பட போலீஸ் காம்போ

ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு யார் படத்தில் ரஜினி நடிப்பார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கவில்லை என்ற செய்தி உறுதியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த ஒரு இயக்குனருடன் அடுத்ததாக ரஜினி இணைய உள்ளார். இது ரஜினியின் 170 அல்லது தலைவர் 171 வது படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.

Also Read : விரைவில் உருவாக இருக்கும் பாட்ஷா 2 .. ரஜினியின் அனுமதிக்காக காத்திருக்கும் அல்டிமேட் ஹீரோ

அதாவது சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ஜெய் பீம் படத்தை இயக்கியவர் டிஜே ஞானவேல். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் டிஜே ஞானவேலுடன் ரஜினி இணைவது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்‌ஷன் தயாரிக்க இருக்கிறது. அதுமட்டுமின்றி ஜெய்பீம் படக்குழுவில் உள்ள அனைத்து டெக்னீசியர்களும் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர்களாம்.

Also Read : 850 தியேட்டரில் ஹவுஸ்புல்லான சூப்பர் ஸ்டாரின் படம்.. பாட்ஷா படம் போல் ரஜினிக்கு அமைந்த ஹிட் படம்

ஆனால் இந்த படத்தில் இசையமைப்பாளர் மட்டும் அனிருத்தை வைத்துக் கொள்ளலாம் என ரஜினி கேட்டுக் கொண்டுள்ளாராம். ஏனென்றால் அனிருத் ரஜினிக்கு உறவினர் என்பதால் வேறு எந்த இசையமைப்பாளரும் வேண்டாம் இவரையே போடலாம் என கூறியுள்ளார்.

ஜெய் பீம் இயக்குனருக்கு இது விருப்பமில்லை என்றாலும் ரஜினியின் விருப்பத்திற்காக ஒற்றுக் கொண்டுள்ளாராம். மேலும் இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் குறித்து அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : ரஜினி கொடுத்த டார்ச்சரால் கடுப்பான இயக்குனர்.. இனி உங்க சவகாசமே வேண்டாம் என்று ஓடிய சம்பவம்

Trending News