திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினிக்கு எண்டே இல்ல , சுடசுட வெளியான அப்டேட்.. வரலாற்று படத்தை லாக் செய்த சூப்பர் ஸ்டார்

Rajinikanth: ‘எனக்கா டா எண்டு கார்டு போடுறீங்க, எனக்கு எண்டே இல்ல’ இந்த வசனத்தை கேட்கும் போது வடிவேலு நம் கண் முன் வந்து போவார். ஆனால் உண்மையிலேயே இந்த வசனத்திற்கு சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் தான். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பில் இருந்தே இதுதான் பிரச்சினையின் கடைசி படம் என்று பல படங்கள் பேசப்பட்டது.

பாபா படத்திற்கு பிறகு ரஜினி சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்று கூட பேசப்பட்டது. ஆனால் அவர் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கி 20 வருடங்களாக பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கிறார். அண்ணாத்தே படம் சூப்பர் ஸ்டாருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

சரி இனி ரஜினி அவ்ளோதான் என் என பேசப்பட்டது. ஆனால் ஜெயிலர் அந்த பேச்சையே அப்படியே மாற்றி விட்டது. ஜெயிலர் படம் கொடுத்த உத்வேகத்தில் தான் ரஜினி அடுத்தடுத்து வேட்டையின் மற்றும் கூலி படங்களை தொடங்கி நடித்துக் கொண்டிருக்கிறார்.

வரலாற்று படத்தை லாக் செய்த சூப்பர் ஸ்டார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய கடைசி படம் இருக்க வேண்டும் என ரஜினி ஆசைப்பட்டார். அதுதான் ரஜினியின் கடைசி படம் என பேசப்பட்டது. ஆனால் தற்போது வேறு ஒரு தகவல் உருவாகி ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ரஜினி கூலி படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கருடன் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார். அதுவும் வரலாற்று கதை. ஷங்கர் ஏற்கனவே வேள்பாரி எனும் நாவலை சூர்யாவை வைத்து இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது, இந்த நாவல் கதையில் ரஜினி தான் நடிக்க இருக்கிறார். இந்த படம் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. ஈரோஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதுவரை ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வெளியான படங்கள் & பட்ஜெட் ,

சிவாஜி – 50 கோடி பட்ஜெட்
எந்திரன் – 132 கோடி பட்ஜெட்
எந்திரன் 2 – 570 கோடி பட்ஜெட்

லோகேஷ்-ரஜினி கூட்டணியில் நடக்கும் சுவாரசியங்கள்

Trending News