வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சூப்பர் ஸ்டார் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. உச்சி குளிர்ந்து போன நடிப்பு அரக்கன்

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாகவே நல்ல திரைப்படங்களை பார்த்துவிட்டு மனதார பாராட்டி வருகிறார். அவருக்கு ரொம்பவும் பிடித்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரை நேரில் அழைத்து பாராட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வரிசையில் தான், நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு கிடைத்தது கூட.

ரஜினி சமீபத்தில் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்துவிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இந்த படம் குறிஞ்சி பூ போன்றது என்றும், லாரன்ஸ் தன்னுடைய நடிப்பால் வியக்க வைத்து விட்டார் என்றும் சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யாவை இந்த காலத்தின் நடிகவேள் என்று பாராட்டி இருக்கிறார்.

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருந்த காலத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ஜாம்பவானாக இருந்தவர் எம். ஆர்.ராதா. வில்லத்தனத்தையே நகைச்சுவையாக சொல்லக்கூடியவர். இன்றுவரை இவருடைய நடிப்புக்கு ஈடு செய்யும் அளவில் எந்த நடிகருமே வரவில்லை. இவரை தமிழ் சினிமாவின் நடிகை வேள் என்று தான் அழைப்பார்கள்.

Also Read:ரஜினி, கமல் படத்தால் நாசமாக்கப்பட்ட தியேட்டர்கள்.. பின் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய சம்பவம்

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் நிகழ்ச்சியின் போது எஸ் ஜே சூர்யாவிடம் ரஜினியின் பாராட்டு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் எம்ஜிஆர் மற்றும் சிவாஜியை விட பெரிய ஜாம்பவான் நடிகர் எம் ஆர் ராதா. அவருடன் என்னை ஒப்பிட்டு ரஜினி பேசியிருந்தது இந்த பிறவியில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். மேலும் எங்களுடைய படத்தை குறிஞ்சி பூ என்று சொன்னது எங்களுக்கு பூஸ்ட் கொடுத்தது போல் இருந்தது.

அடுத்து நான் கில்லர் என்னும் படத்தை எடுக்க இருக்கிறேன். அந்த படத்திற்கு ரஜினியின் பாராட்டு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. சினிமாவில் கலை தான் ஒரு நடிகரை தேர்ந்தெடுக்கிறது. அந்த வகையில் கலை என்னை தேர்ந்தெடுத்ததால் தான் எனக்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கிறது. அந்த தொழிலுக்கு உண்மையாக இருப்பேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

இயக்குனர் ஆசையில் சினிமாவுக்கு வந்து, தற்போது மிகப்பெரிய நடிகனாக மாறியிருக்கிறார் எஸ் ஜே சூர்யா. இப்படியும் ஒருத்தரால் நடிக்க முடியுமா என படம் பார்ப்பவர்களை வாயை பிளக்க வைத்திருக்கிறார். அதிலும் மார்க் ஆண்டனியில் இவருடைய படத்தை பார்த்துவிட்டு இவருக்கு நடிப்பு அரக்கன் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள். இவருடைய உழைப்புக்கு ரஜினியின் பாராட்டு என்பது கண்டிப்பாக மிகப்பெரிய பொக்கிஷம் தான்.

Also Read:பேரனாலும் சிக்கலை சந்தித்த ரஜினி.. இந்த வயசிலேயே அலும்பு பண்ணிய தனுஷின் வாரிசு

 

 

 

Trending News