வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வாலி எழுதிய பாடலில் நடிக்க மறுத்த ரஜினி.. பின் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்ட வரிகள்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 168 திரைப்படங்களில், அவரது திரைப்படங்கள் வெற்றி பெறுகிறதோ, இல்லையோ படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை தான். இதனிடையே அவரது திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களை எழுதும் கவிஞர்கள் மிகவும் கவனத்துடன் பார்த்து பார்த்து வரிகளை எழுதுவார்கள்.

அந்த பாடல்களை கேட்டதற்கு பின்பு தான் ரஜினிகாந்த் அதில் நடிக்க சம்மதிப்பாராம். ஆனால் ரஜினிகாந்த் வேண்டாம் என சொன்ன பாடலில் விருப்பமில்லாமல் நடித்த நிலையில் கோவில் கல்வெட்டிலே இடம்பெறுள்ளது தான் ஆச்சரியமான ஒன்று. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே என்ற பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் வேற லெவலில் இருக்கும்.

Also Read : வாலியின் பாடலை தூக்கி எறிந்த எம்ஜிஆர்.. விஷயத்தை போட்டுடைத்த வைரமுத்து

ஆனால் இந்தப் பாடலில் ஓவராக அம்மா சென்டிமென்ட் வரிகள் உள்ளது, இது எனக்கு செட்டாகாது என ரஜினிகாந்த் கூறினாராம். உடனே இப்பாடலை இசையமைத்த இசைஞானி இளையராஜா ரஜினியிடம் பேசினாராம். அதில் இப்பாடலை நான் உங்களுக்கு ஏற்றார் போல கம்போஸ் செய்து தருகிறேன். நீங்கள் தைரியமாக நடியுங்கள், கண்டிப்பாக இந்த பாடல் உங்களை பெண்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தில் உயர்த்தும் என இளையராஜா நம்பிக்கை தெரிவித்தாராம்.

உடனே ரஜினிகாந்தும் சரி என்று கூறிவிட்டு மனமில்லாமல் தான் இந்த பாடலில் நடித்தாராம். ஆனால் மன்னன் படம் வெளியாகி ஒருபக்கம் ஹிட்டானாலும், பிரத்யேகமாக இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் சக்கைபோடு போட்டது. மேலும் யாரெல்லாம் பெற்ற தாயை மதிக்காமல்இருக்கிறார்களோ அத்தனை பேரின் உள்ளங்களை கரைக்கும் வகையில் இப்பாடலின் வரிகளை வாலி எழுதியிருப்பார்.

Also Read : இளையராஜாவை புறக்கணிக்கும் தமிழ் மக்கள்.. பதவிக்காக இப்படியா பண்றது.!

இப்பாடலை பாடிய பாடகர் யேசுதாஸிற்கு சிறந்த பாடகர் என்ற தமிழ்நாடு ஸ்டேட் அவார்டும் கொடுக்கப்பட்டது அப்படி பல புகழைக் கொண்டுள்ள இந்த பாடலை தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டது தான் இதில் ஆச்சரியமான விஷயம். இதேபோல் திருச்சியில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் கல்வெட்டில் ராஜகோப்பாலாச்சாரி எழுதிய குறை ஒன்றும் இல்லை என்ற பாடல் வரிகள் ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டிற்கும் .

அதற்கு எதிர் கல்வெட்டிலேயே அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலின் முழு வரியும் பொறிக்கப்பட்டு பெருமை சேர்த்திருக்கும். இந்த விஷயத்தை வாலி ஒரு பேட்டியில் கூறினர், மகிழ்ச்சியான தொடக்கமாக இருந்தாலும் அதே போல் இந்த பாடல் படமாக்கும்போது பி. வாசுவின் தாயாரும் இறந்தது மறக்க முடியாதது என கூறினார் வாலி.

Also Read : எனக்கே கதை எழுத சொல்லித்தரியா.. பிரபல நடிகையால் காண்டான இயக்குனர் பி.வாசு

Trending News