ரஜினியின் அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்த படமான ஜெயிலர் மற்றும் லால் சலாம் படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஜெயிலர் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 15 நாட்கள் கால் சீட் லால் சலாம் படத்திற்காக கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் கடந்த வருடம் லோகேஷ் தயாரிப்பில் கமல் நடித்து வெளிவந்த விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
அத்துடன் விக்ரம் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ரஜினிக்கு எப்படியாவது லோகேஷ் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். அதனால் லோகேஷை கூப்பிட்டு உங்க டைரக்ஷனில் நான் படம் நடிக்க வேண்டும். அதுவே என்னுடைய கடைசி படமாக சினிமாவில் இருக்க வேண்டும் என்று சென்டிமென்ட் ஆக பேசி அவரை லாக் செய்து இருக்கிறார்.
Also read: லால் சலாம் ரஜினியின் கேரியரில் முக்கிய படம்.. கதையை லீக் செய்த பயில்வான்
இப்படி கூறிய போது லோகேஷால் மறுக்க முடியவில்லை. அதனால் அவர் வேறு வழி இல்லாமல் ரஜினிக்கு படத்தை இயக்குவதற்கு ஒப்புக்கொண்டார். இதை தெரிந்த தயாரிப்பாளர்கள் சும்மா இருக்க முடியுமா. இவர்கள் மூலமாக பெருத்த லாபத்தை பார்க்கலாம் என்ற நோக்கத்தில் இந்த படத்தை தயாரிக்க லலித், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சன் பிக்சர்ஸ் என மூன்று பேர் போட்டி போட்டார்கள்.
மேலும் கமல் ஏற்கனவே லோகேஷ் மற்றும் ரஜினிக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் இவருக்கு தான் அந்த சான்ஸ் கிடைக்கும் என்று இருந்தது. ஆனால் இவரை ஓரம் கட்டிவிட்டு சன் பிக்சர்ஸ் முந்திவிட்டது. அதற்கு காரணம் தற்போது ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் தான் என்பதால் ஈசியாக ரஜினியிடம் பேசி கொக்கி போட்டு முடித்து விட்டனர்.
Also read: நெல்சனின் ராஜதந்திரத்தை தவிடு பொடியாக்கிய ஐஸ்வர்யா.. நிலைகுலைந்து போன ரஜினிகாந்த்
அத்துடன் மறுபக்கம் லோகேஷையும் தாஜா பண்ணி உங்களுக்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கிறோம் என்று சொல்லி இவரிடமும் இருந்து முழு சம்மதத்தையும் பெற்றுக் கொண்டார். இதனால் லலித் மற்றும் கமலை விரட்டி விட்டு இந்த ப்ராஜெக்டை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். எப்படி எல்லாம் லாபத்தை சம்பாதிக்கலாம் என்று சன் பிக்சர்ஸ்க்கு சொல்லியா கொடுக்கணும்.
அதுக்கு ஏற்ற மாதிரி எல்லா வேலையும் கச்சிதமாக காய் நகர்த்தி விட்டார்கள். எங்கே அடித்தால் நமக்கு கிடைக்கும் என்று சூழ்ச்சிகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவது முடிவாகியுள்ளது. இப்படி அடுத்தடுத்த அப்டேட்டுகளை கூடிய விரைவில் ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள்.
Also read: பண்ணுனதெல்லாம் போதும், ஒரேடியாக ஆப் செய்த ரஜினி.. விஜய்யிட்ட செஞ்ச மாதிரி நெல்சனின் பருப்பு வேகல!