திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

45 வருடத்திற்கு முன்பே புகழின் உச்சியை தொட்டு பார்த்த ரஜினி.. சூப்பர் ஸ்டாரை கொண்டாடும் தயாரிப்பாளர்கள்

Actor Rajini: 1975 ஆம் ஆண்டு அபூர்வராகங்கள் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் தான் மேற்கொண்ட எண்ணற்ற படங்களில் வெற்றி கண்டு, சுமார் 45 வருட அனுபவம் கொண்ட இவரின் சாதனை பற்றி இத்தொகுப்பு காணலாம்.

மேலும் 1978 ஆம் ஆண்டு, ஒரே வருடத்தில் சுமார் 21 படங்களில் ரஜினி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அந்த ஆண்டு வெளிவந்த ஆயிரம் ஜென்மங்கள், பைரவி, சதுரங்கம், முள்ளும் மலரும், இறைவன் கொடுத்த வரம், தாய் மீது சத்தியம், என் கேள்விக்கு என்ன பதில், பாவத்தின் சம்பளம் போன்ற படங்களில் மக்களால் ஈர்க்கப்பட்டார்.

Also Read: விஜய் டிவி 8 சீரியல் நடிகைகளின் சம்பளத்தை கேட்டா தல சுத்துது.. முதலிடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்

அதிலும் குறிப்பாக பைரவி படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு இவரின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு அப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை வழங்கினார். அதை தொடர்ந்து இவர் மேற்கொண்டு படங்களில் சூப்பர் ஸ்டார் எனவும் வரிகள் இடம் பெற தொடங்கியது.

சுமார் 45 வருட கால அனுபவம் கொண்டு, அக்காலத்திலேயே சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்று வாழ்ந்த இவரை, ஒரு வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடித்து வரும் நடிகர்கள் போட்டியாய் எண்ணுவது காலக்கொடுமையாக பார்க்கப்படுகிறது.

Also Read: உதயநிதி, மாரி செல்வராஜ் எல்லாம் ஒன்றுமே இல்லை.. கொடி பறக்க செய்து ருத்ர தாண்டவம் ஆடிய வசூல் வேட்டை

மேலும் தற்போது 72வயதாகும் இவர் இளம் நடிகர்களுக்கு போட்டியாய் படங்களில் நடித்து வருகிறார். அவ்வாறு இந்த வயதிலும் ரஜினி வைத்து படம் தயாரிக்க முன் வரும் தயாரிப்பாளர்கள் ஏராளம். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களால் கொண்டாடப்படும் ஒரே நடிகர் ரஜினி தான்.

மேலும் தற்பொழுது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்ட தயாரிப்பாளரான கலாநிதி மாறன், வரும் 5 தலைமுறையினர்களுக்கும் இவர் மட்டுமே சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும் எனவும், ரஜினிக்கு ரஜினி மட்டும் தான் போட்டியாக இருக்க முடியும் என கூறி நெகிழ்ந்தார்.

Also Read: ஒரு நைட்டுக்கு 12 லட்சம்.. முத்தின கத்திரிக்காய் நடிகையின் அட்ஜஸ்ட்மென்ட் அட்ராசிட்டி

Trending News