சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்க உள்ளார் எனவும், அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாகவும் கூறுகின்றனர்,
இந்த படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் ஆகியவற்றின் தேர்வுகளை மொத்தமாக முடித்துவிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலுடன் அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
ரஜினியின் பெரும்பாலான படங்கள் படப்பிடிப்பு தொடங்கும் போதே டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 7 வருடம் கழித்து ரஜினிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.
அவர் வேறு யாரும் இல்லை. இந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் சென்று கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா படுகோனே தான். இவர் ஏற்கனவே ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருந்த ராணா படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கோச்சடையான் படம் அனிமேஷன் படம் என்பதால் வெறும் சில நாட்கள் மட்டுமே அந்த படத்தில் நடித்தார். அதன்பிறகு ராணாவில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ராணா திரைப்படம் ரஜினியின் உடல்நிலை கருதி கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.