வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தனுஷுக்கு எதிராக காய் நகர்த்தும் சிவகார்த்திகேயன்.. கெடுவான் கேடு நினைப்பானு தெரியுமா?

தனுஷ் எல்லா இயக்குனர்களுக்கும் பிடித்த நடிகராக மாறி விட்டார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு அப்படியே அச்சு அசலாக நடித்து வருவதால் எல்லோரும் இவரை தேடி போய் வாருங்கள் கதை சொல்லி வருகிறார்கள்.

தமிழ் சினிமா தாண்டி மற்ற மாநில இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தேடி வரும் அளவிற்கு வளர்ந்து விட்டார். தனுஷோட கனவு இரண்டு பேர் பயோப்பிக்கில் நடிக்க வேண்டும். அதில் ஒன்று இளையராஜா மற்றொன்று ரஜினி.

தற்பொழுது அவர் ஆசைப்பட்ட மாதிரி இளையராஜா பயோபிக் படத்தில் நடிக்க பட பூஜையும் போடப்பட்டு விட்டது. அவருக்கு பிடித்த இயக்குனர் அருண் மாதேஷ் இயக்குகிறார். கமல் திரைக்கதை எழுதுகிறார். இந்த படத்தில் நடித்த கண்டிப்பா உலகம் முழுவதும் இளையராஜா ரசிகர்களால் தனுஷ் போற்றப்படுவார்.

புகழ் அதிகம் கிடைக்கும் என்ற ஆசை நிறைவேறி இருக்கிறது. இந்த படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டு விட்டது கூடிய விரைவில் இந்த படத்தை வெளியிட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுசுக்கு எதிராக சிவகார்த்திகேயன் செய்த வேலை

இதே நேரத்தில் சத்தம் போடாமல் சிவகார்த்திகேயன் தனுஷுக்கு எதிராக ஒரு வேலையை செய்துள்ளார் தனுஷின் அடுத்த கனவு படம் ரஜினியின் பயோபிக். இதை சிவகார்த்திகேயன் நடிக்க திட்டம் போட்டு ரஜினியிடமும் பேசி விட்டாராம். அவரும் ஓகே சொல்லிவிடுவார் என்றும் கூறுகிறார்கள்..

கொஞ்சம் ரஜினியை போல தோற்றம் இருப்பதால் சிவகார்த்திகேயனுக்கு அழகாக பொருந்திவிடும். இதை தனுஷ் உண்மையிலேயே எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்ப இருக்கும் சூழலில் தனுஷ் ரஜினியிடம் பொய் கேட்டாலும் அந்த வாய்ப்பு கொடுக்க மாட்டார்.

அதை நன்றாக புரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் அழகாக காய் நகர்த்தி வருகிறார். இளையராஜா படத்தில் நடித்தால் கிடைக்கும் புகழை விட ரஜினி பயோபிக் நடித்தால் கிடைக்கும் புகழ் மிக மிக அதிகம்.

சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் வாய்ப்பு கொடுத்தாலும் தற்பொழுது தனுஷ் தான் சிவாவுக்கு பிரச்சனை கொடுத்து வருகிறார் என்று ஒரு செய்தி பரவி வருகிறது. அதற்கு பழிவாங்களோ என்னவோ இப்பொழுது சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்து தனுசுக்கு பிரச்சனை கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

இதை தனுஷ் கண்டிப்பாக எதிர்பார்த்து இருக்க மாட்டார் இதைவிட இன்னும் நிறைய சம்பவங்கள் காத்திருக்கிறது. உண்மையிலேயே தனுஷுக்கு எதிராக உள்ள சிம்பு இதை செய்ய வேண்டும் ஆனால் சிவகார்த்திகேயன் செய்து வருகிறார்.

Trending News