செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரஜினி, கமல் தலையெழுத்தை மாற்றிய அந்த 2 படங்கள்.. சம்பளத்தை தாண்டி லாபம் பார்த்த ரகசியம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படங்கள் மட்டும் நடித்துக் கொடுப்பார்கள். ஆனால் அந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி படமாக அமையும். அந்த வகையில் தான் இவர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வார்கள். ஆனால் ரஜினி, கமல் மட்டும் சற்று மாறுபட்ட விதத்தில் லாபம் அடைகிறார்கள்.

ஒரு காலத்தில் ரஜினி, கமல் போட்டி போட்டு படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றி படங்களாக கொடுத்து வந்தனர். இவர்களின் படத்தின் வெற்றியை பொருத்து இவர்களுடைய சம்பளம் 10 லட்சம் 12 லட்சம் என வாங்கிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இவர்கள் ஆரம்ப காலத்தில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தான் நிறைய படம் பண்ணியிருக்கிறார்கள்.

Also read: அண்ணாமலை கதையை வைத்து மற்றுமொரு படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா.. நீங்க பலே கில்லாடி தான்

ஏனென்றால் அவர்தான் இவர்களை சினிமாவில் வளர்த்து விட்டவர். அந்த ஒரு காரணத்திற்காக கே.பாலச்சந்தர் மீது இருந்த நம்பிக்கையால் கதை கூட கேட்காமல் நடித்து விடுவார்கள் அந்த அளவிற்கு அவருடைய விசுவாசிகள். அதனால் அவர்கள் நடித்து என்னதான் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் கே.பாலச்சந்திரிடம் எப்படி நம்மால் சம்பளம் அதிகம் கேட்க முடியும் என்று எதுவும் பேசாமல் கொடுக்கிற சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொள்வார்கள்.

இப்படியே இவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று கவிதாலயா தயாரிப்பில் இருந்து ரஜினி, கமலுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதன் பின் நீங்கள் என்னுடைய தயாரிப்பில் நடித்துக் கொடுங்கள் அதற்காக நான் சம்பளமும் தருகிறேன். மற்றும் வருகிற லாபத்தில் ஒரு பங்கை நான் உங்களுக்கு தருகிறேன். அதை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: தேவர் மகன் 2க்கு சூர்யா வேண்டாம், இவரை போடுங்க.. கொல மாஸ் நடிகரை களமிறங்கிய கமல்

அதன் பின் இவர்களும் இதை ஒத்துக் கொண்டார்கள். அப்படி அந்த முறையை அறிமுகப்படுத்திய படம் தான் ரஜினிக்கு அண்ணாமலை. இந்த படம் மெகா ஹிட் படமாக கொண்டாடப்பட்டது. இதனால் இவருக்கு சம்பளமும் போக வியாபார ரீதியாக பங்கும் கிடைத்த படமானது.

இதே போல் கமலுக்கு தேவர் மகன் மற்றும் மகாநதி போன்ற படங்களுக்கு அந்த முறையை கடைப்பிடித்தார். இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றதால் கமல் சம்பளம் மற்றும் வியாபார பங்கு என அதிக அளவில் லாபத்தை பார்த்தார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் சம்பளம் போக பங்கும் இப்பொழுது வரை கிடைத்து பெரிய லாபத்தை பார்த்து வருகிறார்கள்.

Also read: பாலச்சந்தர் முதல் ஷங்கர் வரை.. சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர்களின் ஸ்பெஷாலிட்டி

Trending News