சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

25 படங்கள், ரஜினியின் அசுர வளர்ச்சிக்கு காரணம் இந்த ஒரே இயக்குனர்.. அதிலும் 15-க்கு மேல சூப்பர் டூப்பர் ஹிட்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே கோடிக்கணக்கில் வசூலை பெற்று வருகின்றன. தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பியுள்ளார்.

அதேபோல் ரஜினிகாந்த் நடிகர் கிங்காங்கிற்கு போன் செய்து சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றால் தயங்காமல் கேளுங்கள் எனக் கூறிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

தமிழ் சினிமாவில் தூணாக இருக்கும் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் மற்ற நடிகர்களை போல வெற்றி மற்றும் தோல்வி படங்களை கொடுத்துள்ளார். இவரது சினிமா வாழ்க்கை தூக்கிவிட்டது ஒரே ஒருவர்தான் அவர்தான் எஸ்பி முத்துராமன்.

rajinikanth sp muthuraman
rajinikanth sp muthuraman

எஸ்பி முத்துராமன் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய தொண்டு மிகையானது. அதாவது இவர் ஒரு கமர்சியல் கதையை மட்டும் எழுதி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

எஸ்பி முத்துராமனுக்கு ஜெய்சங்கர், சிவாஜி, ரஜினி மற்றும் கமல் போன்றவர்களுக்கு நெருங்கிய நண்பர் இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 72 படங்களை இயக்கியுள்ளார்.

அதிலும் இவர் இயக்கத்தில் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படம் இவருக்கு ஒரு அடையாளம் என்றே கூறலாம். ஆனால் எஸ் பி முத்துராமன் ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கியுள்ளார். ரஜினி நடித்த படங்களிலேயே அதிக படம் இவருதான் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

Trending News