நம் வாழ்வில் எந்த உறவு இல்லாமலும் வாழ்ந்து இருக்கலாம், ஆனால் நட்பு இல்லாமல் யாரும் இருந்திருக்க மாட்டார்கள். அந்த நண்பர்களையும், அவர் பெருமைகளையும் கூறும் விதமாக தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்தன. அனைத்து காலகட்டங்களிலும் வெளியாகியுள்ளன. இதோ ரஜினியுடன் நடித்த நட்பு படங்கள்,
தளபதி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தளபதி திரைப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருப்பார். இப்போதும் நட்பு என்றால் நமக்கு நினைவில் வருவது தளபதி படம் தான்.
அண்ணாமலை: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அண்ணாமலை. ரஜினிகாந்துடன், ஜனகராஜ் நட்பு பெரிதும் பேசப்பட்டது. ரஜினிக்கு இப்படம் திருப்புமுனையாக இருந்தது.
பாட்ஷா: 1995-ல் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஹிட்டடித்த படம் பாட்ஷா. தற்போது வரை கேங்ஸ்டர் படம் என்றால் முதலில் ஞாபகம் வருவது பாட்ஷா படம் தான். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கதாபாத்திரம். பிளாஷ்பேக்கில் ரஜினியின் உயிர் நண்பனை கொன்று விடுகிறார்கள். இதனால் விஸ்வருபம் எடுத்து ரஜினி கேங்ஸ்டர் லீடராக மாறுகிறார் இதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
குரு சிஷ்யன்: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி பிரபு உடன் நட்பு படமாக வெளிவந்தது குரு சிஷ்யன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கௌதமி,சீதா நடித்திருந்தார்கள். இப்படம் முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டிருந்தது.
குசேலன்: குசேலன் 2008 ஆம் ஆண்டு திரைக்கு வெளிவந்திருந்தது. இதில் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆகவே நடித்து இருப்பார். அவருடைய நண்பனாக பசுபதி நடித்திருப்பார். புகழின் உச்சத்தில் இருந்தாலும் தனது ஏழை நண்பனுக்கு உதவும் படமாக இருந்தது.