தனக்கென்று ஒரு தனித்துவமான ஸ்டைலில் தற்போதுவரை கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இரட்டை வேடங்களில் வெற்றி கண்ட படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
ஜானி: 1980 ஆம் ஆண்டு வெளிவந்த ஜானி திரைப்படத்தை மகேந்திரன் இயக்கி இருப்பார். ரஜினி, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒரு ரஜினி ஜானி என்ற திருடன் வேடமும், மற்றொன்று வித்யாசாகர் என்ற நாவிதன் வேடத்தில் நடித்திருந்தார்.
பில்லா: ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் ,ஸ்ரீபிரியா ,பாலாஜி, மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடிப்பில் 1980இல் வெளியான படம் பில்லா. ஹிந்தி திரைப்படமான டொன் எனும் திரைக்கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் ரஜினி பில்லா, ராஜப்பா என்ற கதாபாத்திரங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.
நெற்றிக்கண்: 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எஸ். பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நெற்றிக்கண். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். ரஜினிகாந்த், மேகனா சுரேஷ்குமார், சரிதா, விஜயசாந்தி, லட்சுமி, விசு, கவுண்டமணி பலரும் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
அதிசயப் பிறவி: 1990 இல் வெளிவந்த இத்திரைப்படத்தின் இயக்குனர் எஸ்பி முத்துராமன். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகேஷ், கனகா, சோ ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா.இப்படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
அருணாச்சலம்: சுந்தர். சி இயக்கத்தில் 1997இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியடைந்த படம் அருணாச்சலம். இப்படத்திற்கு கதை எழுதியவர் கிரேசி மோகன். ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா ,மனோரமா மற்றும் பலர் நடித்திருப்பார். இப்படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் ரஜினி நடித்திருப்பார்.
எந்திரன்: ரஜினிகாந்த் ,ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் 2010ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் எந்திரன். இப்படத்தில் ரஜினி சயின்டிஸ்ட் வசீகரன் கதாபாத்திரத்திலும், மற்றொன்று ரோபோவாக சிட்டி கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். இப்படத்தின் ஒளிப்பதிவு ரத்தினவேல். இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
லிங்கா: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா ஷெட்டி, சந்தானம் ,ராதாரவி, விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. இப்படத்தில் தாத்தா, பேரன் என இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். மகாராஜா லிங்கேஸ்வரன் கதாபாத்திரத்திலும், அவரது பேரன் லிங்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த்.