ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அழகு நடிகைக்கு கொக்கி போட்ட ரஜினிகாந்த்.. தலைவரே நீங்களுமா இப்படி

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த்தோடு நடிப்பதற்காக பல நடிகைகள் வரிசை கட்டி நிற்பார்கள். ஏனென்றால் சூப்பர்ஸ்டாருடன் ஒரு படத்தில் நடித்தால் கூட அவர்கள் திரை வாழ்க்கையில் உச்சத்தில் சென்று விடுவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் சூப்பர் ஸ்டாரே ஒரு நடிகையை தன் படத்தில் நடிக்க வைக்க பல வருடங்கள் ஏங்கி உள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தின் தலைவர் 169 திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆயத்தமாகி வருகிறார். இதனிடையே தற்போது அவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்காவில் சென்று ட்ரீட்மென்ட் எடுக்கவும் முடிவு செய்துள்ளார். ட்ரீட்மென்ட்டிற்கு பின் நெல்சனின் இயக்கத்தில் நடிக்க உள்ள ரஜினிகாந்த் தலைவர் 169 திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க வைக்க பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராயிடம் ஒப்பந்தம் செய்யுமாறு நெல்சனிடம் ரஜினி வலியுறுத்தி வருகிறாராம்.

2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய், ரஜினி இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து அசத்தினர். எந்திரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பின் ஐஸ்வர்யாராய் பாலிவுட்டில் சென்று சில படங்களில் நடித்து வந்தார். பின் தற்போது தன் மகளை பார்த்துக் கொண்டு வருகிறார். இதனிடையே தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாராய் தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்த சூழலை பயன்படுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய தலைவர் 169 திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறிக்கொண்டு வருகிறாராம். அது மட்டுமில்லாமல் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி, பாபா, படையப்பா, சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் ஐஸ்வர்யாராயை நடிக்க வைப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல முயற்சிகளில் இறங்கி மெனக்கெட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராய்க்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ள நிலையில் இவரை படத்தில் நடிப்பதற்காக பல இயக்குனர்கள், நடிகர்கள் ஆர்வமுடன் இருப்பார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வளவு ஆர்வம் காட்டி வருவதற்காண காரணம் என்ன என்பது குறித்து தற்போது வரை யாராலும் சொல்ல முடியவில்லை. ஆனால் ஐஸ்வர்யாராய் ரஜினிகாந்த் உடன் எப்போதுமே மரியாதை யோடு நடந்துகொள்வார்

ஒரு முறை கால்பந்தாட்ட போட்டியின் போது ஐஸ்வர்யா ராய் அந்த அரங்கத்தில் உள்ள அனைவரின் முன்னிலையிலும் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஐஸ்வர்யா ராய் மிகவும் மரியாதையானவர் என பேசி வந்தனர். இதுவே ஐஸ்வர்யாராயை ரஜினிகாந்திற்கு பிடிக்க காரணமாக இருக்கும் என்றும் ஐஸ்வர்யா ராய் நல்ல ஒரு நடிகையாக இருப்பதனாலும் மேலும் தற்போது ரஜினியுடன் நடிக்கும் மெச்சூரிட்டி ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே உள்ளதாகவும் திரை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Trending News