தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் என்றால் சின்ன குழந்தைக்கு கூட அப்போது தெரியும். அந்த அளவிற்கு படங்களில் நகைச்சுவையாக சண்டைக்காட்சியில் நடித்து கலக்கியிருப்பார்.
தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக கனல் கண்ணன் பணியாற்றியுள்ளார். அவர் பணியாற்றும் படங்கள் அனைத்திலுமே ஏதாவது ஒரு காமெடி சண்டைக் காட்சியில் நடித்துவிட்டு சென்றுவிடுவார்.
கனல் கண்ணனின் சண்டைக் காட்சிக்கு எப்படி தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்களோ. அதே போல இவருடைய நகைச்சுவையான நடிப்பிற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

முத்து படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் அழுதுவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சியை பார்த்துவிட்டு பிரமித்துப் போன கனல்கண்ணன் அப்போது படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை பார்த்து நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு உடனே ரஜினிகாந்த் இதுவரைக்கும் நான் நன்றாக நடக்க வில்லையா என செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளார். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து பல படங்கள் பணியாற்றியுள்ளனர்.