ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சிறுத்தை சிவா கிட்ட ஏதோ இருக்கு.. மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் ரஜினி

ஒரு படம் ஹிட்டானால் அந்த நடிகர் மீண்டும் அதே இயக்குனருடன் இணைந்து அடுத்த படத்தில் நடிப்பது வழக்கமான ஒன்று தான். பல நடிகர்கள் அவ்வாறு ஒரே இயக்குனருடன் அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளனர்.

உதாரணமாக நடிகர் அஜித் இயக்குனர் சிறுத்தை சிவா உடன் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்திருந்தார். நடிகர் விஜய் கூட இயக்குனர் அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைய உள்ளார் போல. வெற்றி இயக்குனருடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளாராம்.அதன்படி ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் தான் அண்ணாத்த.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது. இதுவரை வயதான ரஜினியை மட்டுமே பார்த்த ரசிகர்கள் அண்ணாத்த படத்தில் இளமையான ரஜினியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.வயசானாலும் அவரின் ஸ்டைல் குறையவில்லை என்பது போல அண்ணாத்த படத்தில் ரஜினி பயங்கர மாஸாக நடித்திருந்தார்.

படமும் நல்ல வெற்றியை பெற்றதால் சமீபத்தில் நடிகர் ரஜினி இயக்குனர் சிவாவை அவரின் இல்லத்திற்கே சென்று சந்தித்து தங்க செயின் ஒன்றை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினி மீண்டும் இரண்டாவது முறையாக இயக்குனர் சிவா உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி அடுத்ததாக இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதகாவும் இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Trending News