அஜித், விஜய் பட இயக்குனரை வளைத்து போட்ட ரஜனி.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

ajith kumar vijay rajinikanth
ajith kumar vijay rajinikanth

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஆதிக்கம் செலுத்தி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது ஸ்டைல் தற்போது வரை எந்த ஒரு நடிகருக்கும் இல்லை என்பது தான் உண்மை. என்னதான் வயதானாலும் இவருக்கான ரசிகர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். ரசிகர்களின் அன்பில் எந்தவித மாற்றமும் இல்லை.

அதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றி. படம் சுமாரான படம் தான். இருப்பினும் ரஜினி ரசிகர்கள் அவரை கைவிடாமல் படத்தை வசூல் ரீதியாக வெற்றி பெற செய்து விட்டார்கள். அண்ணாத்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றாலும் ரஜினிக்கு பெரியளவில் திருப்தியளிக்கவில்லையாம்.

எப்படியாவது ஒரு பிரம்மாண்ட வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அடுத்த படத்திற்கான கதையை தேர்வு செய்து வந்தார். ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர்கள் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி போன்ற பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது.

இதுதவிர ரஜினிக்கு பல வெற்றி படங்களை வழங்கிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர்கள் யாருமே இல்லாமல் புதிதாக ஒரு வெற்றி இயக்குனருடன் ரஜினி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள 169வது படத்தை பிரபல இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்கள் நல்ல வெற்றி பெற்றன.

மேலும் தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு நிலவி வருகிறது. எனவே ரஜினி, நெல்சன் படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement Amazon Prime Banner