திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

என்ன நடிச்சாலும் பாட்ஷா மாதிரி படம் அமையலையே.. புலம்பும் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 40 வருடமாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் சமீப காலமாக அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எதுவுமே ரசிகர்களை திருப்தி செய்யவில்லை என்பது முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரியவருகிறது. ரஜினியின் சில வருடங்களாக இதை அதிகம் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ரஜினியின் ஆரம்ப காலகட்டங்களில் வந்ததுபோல தரமான கமர்ஷியல் படங்கள் இப்போது அவருக்கு அமையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அவரது வயது காரணமா அல்லது அவருக்கு கதை எழுதும் இயக்குனர்கள் காரணமா என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

சமீபத்தில் வந்த அண்ணாத்த திரைப்படம் அனைவராலும் ஆகா ஓகோ என கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக அந்தப் படம் பெரும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினி படம் வெற்றி என சிறுத்தை சிவா அழைத்து பரிசு கொடுத்தாலும் உண்மை என்ன என்பது அவருக்கே தெரியும் அல்லவா.

தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் உள்ள நண்பர்களை அழைத்து முன்னர் போல் தன்னுடைய படங்களில் சரியான கலவையில் கமர்சியல் அம்சங்கள் இருப்பதில்லை என கவலைப்பட்டு உள்ளாராம். குறிப்பாக முத்து, படையப்பா, அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்கள் போல் இப்போது எனக்கு ஒரு படமும் அமையவில்லையே என மனம் வருந்திக் கொண்டிருக்கிறார்.

சுரேஷ் கிருஷ்ணா, கேஎஸ் ரவிக்குமார் போன்ற இயக்குனர்கள் இப்போது அந்த மாதிரி படங்கள் தனக்கு தருவார்களா எனவும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே அடுத்த படம் கேஎஸ் ரவிக்குமார் தான் இயக்குனர் என தகவல்கள் அடிபட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்தி அதை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது. இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

rajini-nivetha-thomas
rajini-nivetha-thomas

Trending News