வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சரத்குமாரின் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட ரஜினி, விஜயகாந்த்.. என்ன படம் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைல் மற்றும் வசனம் இரண்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது 71 வயதை கடந்தும் ரஜினி டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் தனது 169 ஆவது படமான ஜெயிலர் படத்தில் ரஜினி நடிக்கயுள்ளார்.

அதேபோல் விஜயகாந்த் அவர்களும் தமிழ் சினிமாவில் நல்ல மனம் கொண்ட நபர் என்ற பெயரை வாங்கியுள்ளார். யார் எந்த உதவி கேட்டாலும் தன்னால் முடிந்த உதவியை செய்யக்கூடியவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவின் கேப்டனாக வலம் வந்த விஜய்காந்த் உடல்நலக்குறைவால் சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார்.

ரஜினிகாந்த், விஜயகாந்த் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. மேலும் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் இருவருமே ஆரம்ப காலத்தில் ஒன்றாக நடித்து வந்தனர். அப்போது ரஜினிகாந்த் படத்தை விட விஜயகாந்தின் படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வந்தது.

மேலும் அப்போது மாஸ் ஹீரோவாக வலம் வந்த ரஜினிகாந்த், விஜயகாந்த் இருவரும் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. இந்நிலையில் இந்த இரு பெரிய நடிகர்களும் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட அந்த வாய்ப்பு சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கு கிடைத்தது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2005ல் வெளியான ஐயா படம் தான் அது. முதலில் இப்படத்தின் வாய்ப்பு ரஜினிக்கு வர அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் அதன் பிறகு ஹரி விஜயகாந்திடம் கதையை கூறியுள்ளார். விஜயகாந்தும் அப்போது ஐயா படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பின்பு சரத்குமார் நடிப்பில் ஐயா படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.

ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்க மறுத்ததை நினைத்து அப்போது கவலை பட்டதாகவும் தகவல் வெளியானது. அதாவது சரத்குமார் அப்பா, மகன் என ஐயா படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனால் ரஜினி இப்படத்தில் நடிக்க மறுத்ததால் இப்படிப்பட்ட வெற்றி படத்தை தவற விட்டு விட்டோமே எனக் கூறியுள்ளார்.

Trending News