தமிழ் சினிமாவில் சமீப காலமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது தான் ஊரடங்கு தளர்வு காரணமாக திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்களை 50 சதவீத இருகைகளுடன் ஒளிபரப்ப அனுமதித்துள்ளனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டர் முன்பு 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என வைத்துவிட்டு தியேட்டர் உள்ள 100 சதவீத இருகைகளுடன் அனுமதித்துள்ளனர்.
இதனை பார்த்த சுகாதாரத்துறை அமைப்பினர் பல திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் திரையரங்குகள் அனைத்தும் சுத்தமாக இருக்கிறதா என்பதை கண்காணித்து வந்தனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது கொரோனா ஊரடங்கு விதிகளை பின்பற்றி வருகின்றனர்.
இத்தனை நாட்களாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே தான் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நவம்பர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத சதவீத இருகைகளுடன் பார்ப்பதற்கு தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனால் ஒரு சிலர் தற்போது வரை கொரோனா ஒரு சில இடங்களில் பரவி தான் வருகிறது. அப்படியிருக்கும்போது எதற்காக திரையரங்க உரிமையாளர்களுக்கு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் தற்போது திமுக அரசு கட்டுப்பாட்டில் தான் திரையரங்குகள் உள்ளன.
அதேபோல் திமுக நெருங்கிய தொழில்துறை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அண்ணாத்த படத்தை தயாரித்துள்ளது. இப்படம் வெளியாகும் போது 50 சதவீத இருகைகளுடன் அனுமதிக்கப்பட்டால் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கும். அதனால் தற்போது 100% இருகைகளுடன் அனுமதி வழங்குவதற்கு இது தான் காரணம் என கூறி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் கொரோனா பரவல் குறைவாக இருந்தாலும் திரையரங்குகளில் 100 க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருக்கும் போது ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் அது பெரிய அளவில் பாதிக்கும் என கூறி வருகின்றனர்.
ஆனால் ரஜினி ரசிகர்கள் தற்போது நவம்பர் 1ஆம் தேதி நாங்கள் மறக்க மாட்டோம் இப்போதே நாங்கள் திரையரங்கில் ரஜினி படத்தை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளோம் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.