வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பாரதிராஜாவின் நடிப்பை பார்த்து மிரண்டு போன சூப்பர் ஸ்டார்.. கொண்டாட்டத்தில் தயாரிப்பாளர்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படம் ராக்கி. இப்படம் அனைவரும் ரசிக்கும் வகையில் ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா, ரோகிணி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் இயக்குனர் பாரதிராஜா வயதான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கேரக்டர் அவருக்கு நிச்சயம் பாராட்டைப் பெற்று தரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து நடத்தி வரும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. டிசம்பர் 23 அன்று வெளியாக இருக்கும் ராக்கி படத்தின் ப்ரமோஷனுக்காக நயன்தாரா ஸ்பெஷலாக வரும் வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வீடியோவில் நயன்தாராவின் அசத்தலான நடிப்பும், வசனமும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. தற்போது இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சிறப்பாக அவர் வீட்டில் உள்ள தியேட்டரில் காண்பிக்கப்பட்டது.

ராக்கி படத்தை பார்த்து ரஜினிகாந்த் மிரண்டுள்ளார். அந்த அளவுக்கு படம் மிகவும் நன்றாக இருக்கிறதாம். படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர், நடிகைகளையும் மிகவும் பாராட்டி தள்ளியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

மேலும் இந்த படத்தில் தன் மாறுபட்ட நடிப்பில் மிரட்டி இருந்த பாரதி ராஜாவை கண்டு ரஜினிகாந்த் வியந்து விட்டாராம். படத்தை பார்க்க வரும் மக்கள் முழு திருப்தியுடன் தான் செல்வார்கள் என்று படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் பல நல்ல கருத்துடைய திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ராக்கி திரைப்படம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு ஒரு நல்ல லாபத்தை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

rocky vasanth ravi feat

Trending News