திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

பாட்ஷா படத்தில் நடித்த ரஜினியின் தம்பி.. இப்ப ரஜினிக்கு அண்ணன் போல இருக்காரே

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த நக்மா, ரகுவரன் மற்றும் ஆனந்தராஜ் உட்பட அனைத்து நடிகரின் நடிப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது வரை ரஜினியின் திரை வாழ்க்கையில் பாட்ஷா படம் முக்கிய படமாக உள்ளது.

இப்படத்தில் ஆனந்தராஜ் நடிப்பை பலரும் பாராட்டினர். அதுவும் ரஜினியை கட்டிவைத்து ஆனந்தராஜ் அடிக்கும் காட்சிகள் இன்றுவரை பெரிதும் பேசப்பட்டு தான் வருகிறது. இந்த காட்சியில் நடிப்பதற்கு பல நடிகர்களும் தயக்கம் காட்டினர். ஆனால் ஆனந்தராஜ் மட்டுமே தைரியமாக இந்த காட்சியில் நடித்தார்.

பாட்ஷா படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்தவர் ஷஷி குமார். இவர் ரஜினியை பார்த்து நீங்க யாரு, பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க, சொல்லுங்க சொல்லுங்க என பேசும் வசனம் படம் வெளிவந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்டது.

shashi kumar
shashi kumar

இப்படத்திற்கு பிறகு இவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். சினிமாவில் கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி அப்படி அரசியலில் நுழைந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதன்பிறகு குடிபோதையில் கார் ஓட்டி பெரிய விபத்து ஏற்பட்டது. அதனால் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதனால் தற்போது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

Trending News