சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

பெரிய மனுஷனாய் நடந்து கொண்ட சூப்பர்ஸ்டார்.. யாரும் நஷ்டப்படாமல் அப்பவே ரஜினி செய்த பேருதவி

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிவாஜி தி பாஸ். சிவாஜி திரைப்படம் வெளியான போது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதுவும் சிவாஜி படத்தில் இடம் பெற்ற சும்மா அதிருதில்ல என்ற வசனம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு ரஜினியின் திரை வாழ்க்கையில் சிவாஜி படம் முக்கியமாக உள்ளது.

சிவாஜி படத்தை ஏவிஎம் ஸ்டூடியோ நிறுவனம்தான் தயாரித்திருந்தது. சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை 1,000 ரூபாய் தான். மேலும் சிவாஜி படத்தில் ரஜினியின் சம்பளமாக 19 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. சிவாஜி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த போது திடீரென ஒரு சிக்கல் ஏற்பட்டது.

அதாவது சிவாஜி படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் போது சிவாஜி என்ற படத்தின் பெயர் தமிழ் பெயர் கிடையாது இதற்கு வரி வேண்டும் எனக் கூறியுள்ளனர். அப்போது ரஜினிகாந்த் கொஞ்சமும் யோசிக்காமல் தனது சம்பளத்திலிருந்து 30% அதாவது 5 கோடி ரூபாயை வரியாக கொடுப்பதற்கு சம்மதித்துள்ளார்.

அந்த அளவுக்கு ரஜினிகாந்த் பெருந்தன்மையாக நடந்து கொண்டுள்ளார் சிவாஜி படம் வெற்றி பெறுமா தோல்வி பெறுமா என்பது கூட அவர் கவலைப்படவில்லை ஆனால் சிவாஜி படம் நன்றாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அதனால் எந்த விதமான பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகவே ரஜினிகாந்த் தனது சம்பளத்திலிருந்து வரியை செலுத்தி உள்ளார்.

ரஜினிகாந்த் நினைத்திருந்தால் சிவாஜி படத்திற்கான வரியை தயாரிப்பு நிறுவனத்தை கொடுக்கும்படி சொல்லியிருக்கலாம் ஆனால் அன்றைய சூழ்நிலையில் ரஜினிகாந்த் அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் ரஜினிகாந்த் தனது சம்பளத்திலிருந்து வரியை செலுத்தியது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதனால்தான் ரஜினிகாந்த இப்போதுவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News