சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தம்பி, கதை ரெடியா? இளம் இயக்குனருக்கு போன் போட்ட ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறாராம் ரஜினி. இப்போது அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதை தேர்வு செய்வதில் கவனத்தை செலுத்தி வருகிறாராம்.

ரஜினிகாந்தின் உடல்நிலை சமீபத்தில் சரியில்லாமல் போனது குறிப்பிடத்தக்கது. தற்போது சிகிச்சை முடிந்த வீட்டில் ரெஸ்ட் எடுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஒரு புதிய படம் ஒன்றில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.

அண்ணாத்த படம் தான் அவருடைய கடைசி படம் என பலரும் கூறி வந்தனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆனால் உடம்பில் உயிர் உள்ளவரை சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருப்பேன் என ஒவ்வொரு பட வெளியீட்டுக்கு பிறகும் நிரூபித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அந்தவகையில் அடுத்ததாக சிறுத்தை சிவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணப் போவதாக தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்க அதிக வாய்ப்பு உள்ளது கார்த்திக் சுப்புராஜ் தான் என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.

இது சம்பந்தமாக சமீபத்தில் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இடம் போன் பேசி பேசியதாகவும் கூறுகின்றனர். ரஜினி ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் பேட்ட என்கிற படத்தை கொடுத்த அவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியவர் கார்த்திக் சுப்புராஜ் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி அல்லது சிறுத்தை சிவா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் தான் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பேட்ட படம் முடித்தவுடனேயே இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருந்த நிலையில் அது தள்ளிச் சென்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Trending News