தமிழ் மட்டுமல்லாமல் உலக அளவில் புகழ் பெற்று இருக்கும் ரஜினிகாந்த் நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் முன்னணி நடிகராக இருக்கும் போது செய்த பல விஷயங்கள் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
அதுமட்டுமல்லாமல் ரஜினியின் திருமண வாழ்க்கை கூட பல சர்ச்சைகள் நிறைந்ததுதான். 80 காலகட்டத்தில் பரபரப்பாக திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு நடிகை லதாவின் மீது காதல் ஏற்பட்டது. அதைக் கேள்விப்பட்ட அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ரஜினியை கண்டித்ததால் அது தோல்வியில் முடிந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அதன்பிறகு ரஜினி தன் முன்னாள் காதலியின் பெயர் கொண்ட பாடகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகளுடன் நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களுடைய வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் தான் ரஜினிக்கு பிரபல நடிகை அமலாவின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் வேலைக்காரன் என்ற படத்தில் முதன்முதலாக ஜோடி போட்டு நடித்தனர். அப்போது ஆரம்பித்த அவர்களின் பழக்கம் பர்சனல் வாழ்க்கைகளை பகிர்ந்து கொள்வது வரை நெருக்கமாக மாறியிருக்கிறது.
அதன் பிறகு அவர்கள் இருவரும் கொடிபறக்குது, மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்தார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த அவர்களுடைய நெருக்கம் பின்னாளில் அமலாவின் ஷூட்டிங் எங்கு நடந்தாலும் அங்கு சென்று ரஜினி அவரை சந்திக்கும் அளவுக்கு வளர்ந்தது.
இது பற்றி அன்றைய பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் எழுதப்பட்டது. மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக அடிக்கடி வெளிநாடு செல்வது போன்றும் பேசப்பட்டது. அந்த சமயத்தில்தான் ரஜினி தன் குடும்பத்தை விட்டு தனியாக பிரிந்து வந்து தன் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத லதா ரஜினிகாந்த் உடனே பாலச்சந்தரை சந்தித்து தன் பிரச்சினையை கூறியிருக்கிறார். உடனே அவரும் ரஜினியை அழைத்து நீ செய்வது தவறு, உன் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பார்க்க வேண்டும்.
இவ்வளவு புகழுடன் இருக்கும் நீ இப்படி ஒரு விஷயத்தை செய்தால் பெண்கள் மத்தியில் உனக்கு இருக்கும் ஆதரவு குறைந்து விடும். சினிமாவிலும் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். அதன் பிறகு சற்று நிதானமாக யோசித்த ரஜினியும் விவாகரத்து முடிவை கைவிட்டுள்ளார். இந்த செய்தி அப்போது பத்திரிக்கைகளில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.