புதன்கிழமை, மார்ச் 12, 2025

ரிஸ்க் எடுக்க தெம்பு இல்லன்னு ஒதுக்கிய சூப்பர் ஸ்டார்.. ரஜினி போடும் மனக்கணக்கு

20 வயது பாலகன் போல் ரஜினி சுழன்று சுழன்று நடித்து வருகிறார். கூலி படப்பிடிப்பில் அவரின் வேகத்தை கண்டு லோகேஷ் கனகராஜ் பிரமிப்பாகி விட்டாராம். கிட்டத்தட்ட 80 சதவீதம் படம் முடிந்து விட்டதாம். இந்த ஏ ஐ தொழில்நுட்பம் எதுவும் வேண்டாம் என முன்கூட்டியே ரஜினி, லோகேஷ் இடம் தெரிவித்துள்ளார்.

இந்த படம் முடிந்த கையோடு ஜெயிலர் 2 ஆரம்பிக்க உள்ளனர். அதற்காக நெல்சன் இடமும் கால்சீட் கொடுத்து விட்டார் ரஜினிகாந்த். இதற்கிடையில் ரஜினி அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படம் பண்ணப் போகிறார், அந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்ற பேச்சுக்கள் அடிபட்டது.

இந்த இரண்டு செய்திகளும் வெறும் பேச்சுவார்த்தை அளவிலேயே உள்ளது. ஆனால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரஜினியை அணுகியுள்ளனர். அவர்களுக்காக மாரி செல்வராஜ் ஒரு படம் பண்ண இருக்கிறார். அதனால் அவரை ரஜினியிடம் அனுப்பி உள்ளனர். அதற்கு ரஜினி தெளிவாக மறுப்பு தெரிவித்து விட்டாராம்.

ஏற்கனவே தயாரிப்பாளர் தானு, ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணுவதற்கு மாரி செல்வராஜை அவரிடம் அனுப்பியுள்ளார். அப்போதும் கூட ரஜினி அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம். பொதுவாக எப்பொழுதும் ரஜினி எதிர்பார்ப்பது முற்றிலுமாக ரசிகர்களுக்கு பிடிக்கக்கூடிய கமர்சியல் ஸ்டோரிதான்.

மாரி செல்வராஜ் படங்களில் கர்ணன், மாமன்னன் போன்று கமர்சியல் பேச்சுக்கே இடம் கிடையாது. அதனால் ரஜினி தற்சமயம் ரிஸ்க் எடுக்க பயப்படுகிறார். அவருக்கு தேவை அவரது ரசிகர்கள் மற்றும் பொதுவான ஆடியன்ஸ் ரசிக்கும்படி படம் பண்ண வேண்டும். வேட்டையன் போல் ஒரு கன்டன்ட் எடுத்து படம் பண்ணுவது ரிஸ்க் என சூப்பர் ஸ்டார் யோசித்து வருகிறார்.

Trending News