Rajinikanth – Sivaji Ganesan: 90களின் காலகட்டத்தில் குமுதம் பத்திரிக்கை அப்போதைய ஹீரோக்களில் அதிக செல்வாக்கில் இருப்பவர்கள் யார் என்ற ஒரு சர்வே எடுத்து இருக்கிறது. இதை செல்வாக்கு மீட்டர் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது. 90களில் முன்னணியில் இருந்த 8 ஹீரோக்கள் இந்த செல்வாக்கு மீட்டரில் இடம் பெற்றிருக்கிறார்கள். தற்போது இதில் ரஜினி மற்றும் கமலைத் தவிர வேறு யாரும் ஹீரோவாக நீடிக்க வில்லை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறுபதுகளில் தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து இருந்தாலும், 90களிலும் ஆக்டிவ்வாக நடித்துக் கொண்டிருந்தார். இவருடைய நடிப்பில் வெளியான முதல் மரியாதை படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டு அடித்தது. அப்போது சிவாஜி கணேசன் தான் செல்வாக்கு மீட்டரில் முதலிடத்தில் இருந்திருக்கிறார்.
Also Read:சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட ஜெயிலர் நரசிம்மா.. ரஜினி செய்யாததை செய்து காட்டிய சிவராஜ்
ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் சிவாஜிக்கு அடுத்து ரஜினி இடம் பிடித்திருக்கிறார். சிவாஜிக்கு 58.76% பேர் ஓட்டு போட்டிருக்கும் நிலையில், ரஜினிகாந்த்திற்கு 51.06 சதவீதம் பேர் ஓட்டு போட்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உலகநாயகன் கமலஹாசன் இருந்திருக்கிறார். அவருக்கு 49.99% பேர் ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு அடுத்தபடியாக முன்னணி ஹீரோக்கள் வரிசையில் நான்காவது இடத்தில் சத்யராஜ் இருந்திருக்கிறார். அவருக்கு 38.59 சதவீதம் பேர் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். சத்யராஜுக்கு அடுத்து முப்பத்தி 31. 13 சதவீதம் ஓட்டுக்களோடு நவரச நாயகன் கார்த்திக் ஐந்தாவது இடத்தில் இருந்திருக்கிறார்.
கேப்டன் விஜயகாந்த் அப்போது பல புரட்சிப் படங்கள் மற்றும் கிராமத்து சப்ஜெக்டுகளில் நடித்து மக்களின் மனதில் ஆட்சி செய்து கொண்டிருந்தார் அவர் இந்த செல்வாக்கு மீட்டர் சர்வேவில் ஆறாவது இடத்தில் 27.59 சதவீதம் ஓட்டுக்களோடு இருந்திருக்கிறார் கேப்டனை தொடர்ந்து கிராமத்து நாயகன் ராமராஜன் 26. 65 சதவீதம் ஓட்டுக்களோடு ஏழாவது இடத்தில் இருந்திருக்கிறார்.
அப்பா கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மகனும் கதாநாயகனாக களம் இறங்கியது சிவாஜி மற்றும் பிரபு தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த செல்வாக்கு மீட்டரில் முதலிடத்தில் இருக்க, இளைய திலகம் பிரபு 25. 86 ஓட்டுக்களோடு எட்டாவது இடத்தில் இருந்திருக்கிறார்.
Also Read:5 வருடத்திற்கு முன்பே சமாளித்த ரஜினியிடம் தோத்துப்போன விஜய்.. என்னைக்கும் கழுகு கழுகு தான்