தற்போது தமிழகத்தில் மீண்டும் குரானா பரவல் அதிகரித்துள்ளதால் அதை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பிரபலங்களிடம் நிதி வசூல் செய்து வருகின்றனர். அந்த வகையில் பலரும் தானாகவே முன்வந்து நிதி உதவி செய்து வருகின்றனர்.
முன்னதாக தமிழ் சினிமா நடிகர்களில் சூர்யா குடும்பத்தினர் ஒரு கோடியும், அஜித், சிவகார்த்திகேயன் போன்றோர் 25 லட்சமும், ஜெயம் ரவி குடும்பத்தினர் 10 லட்சமும், ரஜினியின் மகள் சௌந்தர்யா தன்னுடைய தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒரு கோடியும் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து பல தொழில் நிறுவனங்களும் தொழிலதிபர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்த நிலையில் தற்போது வரை விஜய் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் எதுவுமே செய்யவில்லை என்ற பேச்சு கோலிவுட் வட்டாரங்களில் ஆரம்பித்தது.
இதனை சுதாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று முதல் அமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சத்தை கொடுத்துள்ளார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரசு வலியுறுத்தும் அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கொரானாவின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பது தினமும் ஒருவர் இறக்கும் செய்தி கேட்டு அனைவரும் தெரிந்து கொள்கிறோம். இந்த முறை கொரானா தாக்கம் தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களுக்கும் உயிர் பயத்தை காட்டி விட்டது என்றே சொல்லலாம்.
தற்போது முன்னணி நடிகர்கள் அனைவரும் ஒவ்வொருவராக நிதி கொடுத்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் எப்போதும் கொடுப்பார் என்பதை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.