வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மனதில் ஒன்றை வைத்து கொண்டு நெல்சனை பாடாய்படுத்தும் சூப்பர் ஸ்டார்.. செய்வதறியாமல் திணறும் நெல்சன்

அண்ணாத்தே திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி காந்த்,  நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் மொத்த பட்ஜெட் 175 கோடி ஆகும். இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் வெற்றி என்பது ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் இருவருக்குமே ஒரு அழுத்தம் தான். அதற்குக் காரணம் இவர்கள் இருவருடைய கடைசி படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றதுதான். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னுமே மிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கிறார் என்பது இன்னும் தெளிவாகவே தெரிகிறது.

Also Read: விழி பிதுங்கி நிற்கும் நெல்சன்.. ஜெயிலர் படத்தில் கோர்த்துவிடும் ரஜினி

இதன் தாக்கமாகவோ என்னவோ ஜெயிலர் படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட படத்தில் தமன்னா இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதேபோன்று இந்தப் படத்தில் நாளுக்கு நாள் ஒவ்வொருவராக இணைந்து கொண்டே போகிறார்கள்.

மேலும் இன்றைய சினிமா ட்ரெண்டில் மல்டி ஸ்டார்ஸ் படங்களுக்கு நல்ல வரவேற்று இருக்கிறது. நடிகர்களில் யாராவது ஒருவர் நல்ல பெர்ஃபார்மன்ஸ் செய்து விட்டாலும் அந்தக் காட்சி ரசிக்கும்படி அமைந்து விடுகிறது. இதனால் ஜெயிலர் படத்தில் இந்த ட்ரெண்டையும் கொண்டு வந்து விட்டார்கள்.

Also Read: ரஜினி காலில் விழும் எஸ் ஏ சி.. விஜய் தனது அப்பாவை வெறுக்க இப்படி ஒரு காரணமா.!

இந்த படத்தில் ரஜினிகாந்தின் தலையீடு ரொம்பவும் அதிகமாவே இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் நெல்சன் உடன் இணைந்து ரஜினியும் சரி செய்து கொண்டிருக்கிறார். உண்மையை சொன்னால் ரஜினியின் மனதில் சமீபத்தில் உலகநாயகன் நடித்து வெளிவந்த விக்ரம் படத்தை போல் டெய்லர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.

அந்தப் படத்தைப் போலவே இந்த ஜெயிலர் படமும் அமைந்து விட வேண்டும் என்று ரஜினிகாந்த் ரொம்பவும் அடம் பிடித்து வருகிறார். இதனால் நெல்சனை பாடாய்படுத்தி வருகிறாராம். நெல்சன் உடைய சினிமா பாணியே வேறு. தற்போது அவரை ரஜினிகாந்த் படுத்தும் பாட்டில் ஒவ்வொரு சீனுக்காகவும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்.

Also Read: 33 வயது நடிகையை ரஜினிக்கு வில்லியாக்கும் நெல்சன்.. 4 ஸ்டேட்டிலும் மாட்டி விடும் சன் பிக்சர்ஸ்

Trending News