புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினி பெர்சனலாக பாதிப்படைந்த 5 விஷயங்கள்.. வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு நடந்த சம்பவம்!

Rajinikanth: நான்கு தலைமுறைகளாக நம்பர் ஒன் ஹீரோ, நிரந்தரமான ஒரே சூப்பர் ஸ்டார். 400 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு. தலைவரே என்று அழைக்க கோடி கணக்கில் ரசிகர்கள்.

கண்டக்டராக இருந்து இன்று 600 கோடி வசூல் செய்யும் மாஸ் ஹீரோ. இதைத் தாண்டி ரஜினிக்கு 74 வயதில் நிறைவான வாழ்க்கை என்ன இருக்கப் போகிறது.

ஆனால் ரஜினிக்கும் வெளியில் சொல்ல முடியாத சோகங்கள் இருக்கிறது. ஒருமுறை கலை நிகழ்ச்சி ஒன்றில் அவருடைய குரு கே பாலச்சந்தர் ரஜினியை பேட்டி எடுத்தார்.

அதில் சிவாஜி ராவ் முதல் ரஜினி வரை, இன்னும் உன் வாழ்க்கையில் எது கிடைக்கவில்லை என்று நினைக்கிறாய் என கேட்டார்.

அதற்கு அத்தனை பேர் கூடி இருக்கும் அரங்கில் ரஜினி ரொம்ப வெளிப்படையாகவே நிம்மதி இல்லை என்று கூறினார்.

பாதிப்படைந்த 5 விஷயங்கள்

உண்மையை சொல்லப் போனால் தன்னுடைய மனதில் இருந்த ஆதங்கத்தை தான் ரஜினி வெளிப்படுத்தி இருக்கிறார்.

என்னதான் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டாலும், இந்த வயதில் இவருக்கு இதெல்லாம் தேவையா என கேளிக்கை செய்வதற்கும் கூட்டம் இருக்கிறது.

30 வருடங்களுக்கு முன் வந்த விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அவரை ரஜினியோடு போட்டி போட வைக்க பல முயற்சிகள் நடந்தது.

கோச்சடையான் பட சமயத்தில் ரஜினிக்கு பெரிய அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதை அவரே வெளிப்படையாக ஒரு மேடையில் பேசினார்.

ரஜினியின் ஒரு படம் கொஞ்சம் சரியாக போகவில்லை என்றாலே அவ்வளவுதான் நீ ரஜினி என்று கோஷம் போடவும் கூட்டம் இருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வரப்போகிறேன் என அறிவித்தார் ரஜினி. அதன் பின்னர் தன்னுடைய உடல் நிலையை காரணமாக சொல்லும் பொழுது பெரிய அளவில் கேலிக்கு உள்ளானார்.

அதேபோன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது ரஜினி பேசிய கருத்துக்கள் பெரிய அளவில் எதிர்ப்பை கிளப்பியது.

சமீபத்தில் திமுக கட்சி பற்றி அவர் பேசிய விஷயம் அந்த கட்சியில் உள்ள மூத்த தலைவராலேயே நெகட்டிவ் விமர்சனத்திற்கு உள்ளானது.

போதாத குறைக்கு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து அவருக்கு மிகப்பெரிய மன வருத்தத்தை கொடுத்திருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News