நேற்று முன்தினம் தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்களுக்கு பல உதவிகளை செய்தார். அதுமட்டுமன்றி ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிப்பிற்கும் உதவியுள்ளார்.
இதற்கு முன்னர் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் சுமார் 1800 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்கள் படிப்பிற்கு உதவி செய்துள்ளார். தமிழ்நாட்டில் அவரைப் போன்று நடிகர் சூர்யாவும் அகரம் பவுண்டேசன் மூலம் குழந்தைகளின் கல்விக்கு பல நன்மைகள் செய்துள்ளார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது 71வது பிறந்தநாளையொட்டி 100 மாணவர்களுக்கு ரஜினிகாந்தின் அறக்கட்டளை சார்பாக டி.என்.பிஎஸ்சி கோச்சிங் இலவசமாக கொடுக்கும் முயற்சிகளை செய்து வருகின்றார்.
ரஜினியின் இந்த அறிவிப்பினால் ஏகபோக உற்சாகத்தில் உள்ளனர் தலைவரின் ரசிகர்கள். மேலும் அவர்கள் இதேபோல் நீட் தேர்வுக்கும் ஏதாவது இலவச கோச்சிங் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் தலைவர் அரசியலுக்கு வர விட்டாலும் அவருடைய செயல்பாடுகளும், சிந்தனைகளும் மக்களுக்கு நல்லது செய்வதிலேயே இருக்கிறது என ஆர்ப்பரித்து வருகின்றனர்.
ஏற்கனவே சூர்யா அகரம் பவுண்டேஷன் ஆரம்பித்து லட்சக்கணக்கான குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் தன்னால் முயன்றதை சமூகத்திற்கு செய்து வருகிறார் சூர்யா.
