திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தலைவர் 170-க்கு தயாராகும் சூப்பர் ஸ்டார்.. புத்துணர்ச்சிக்காக சென்ற ட்ரிப், வைரலாகும் புகைப்படம்

Actor Rajini: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள ஜெயிலர் படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியானது.

தமன்னாவின் கலக்கல் நடனத்துடன் வெளிவந்த அந்த காவாலா பாடல் தான் இப்போது சோஷியல் மீடியாவையே கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டாம் பாடலும் விரைவில் வெளியாக இருக்கும் அறிவிப்பு அடுத்த கட்ட ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also read: ரஜினியை அசிங்கப்படுத்தய ஜெயிலர் படக்குழு.. காவாலா பாடலால் கொந்தளிக்கும் பிரபலம்

இப்படி ஜெயிலர் படத்தின் ப்ரமோஷன் வேலைகள் ஒரு பக்கம் ஜோராக நடந்து கொண்டிருக்கின்றது. இப்படத்தை முடித்துக் கொடுத்த கையோடு சூப்பர் ஸ்டார் தன் மகளின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க சென்றார். மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்து வந்த அவர் தற்போது தன்னுடைய காட்சிகளை எல்லாம் முடித்துக் கொடுத்து விட்டார்.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் போட்டோவுடன் வெளியானது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன்பாக ஜாலியாக ஒரு ட்ரிப் சென்றுள்ளார். இந்த இரு படங்களை தொடர்ந்து அடுத்ததாக இவர் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் கூட்டணியில் தலைவர் 170 பாடத்தில் நடிக்க இருக்கிறார்.

Also read: ஒதுங்கிய ரஜினி, இறங்கிய அர்ஜுன்.. 23 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் 2-ம் பாகம்

ஆனால் அதற்கு முன்பாக அவர் ஒரு புத்துணர்ச்சிக்காக இப்போது மாலதீவுக்கு சென்றுள்ளார். இலங்கை வழியாக மாலத்தீவுக்கு செல்லும் சூப்பர் ஸ்டாருக்கு இலங்கையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த போட்டோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

rajini-latest
rajini-latest

அதில் சூப்பர் ஸ்டார் மிகவும் இளமையாக காட்சியளிக்கிறார். குட்டி டிராவல் பேக்கை கையில் எடுத்துக்கொண்டு குதூகலமாக இருக்கும் அவருடைய இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சுற்றுலாவை என்ஜாய் செய்து விட்டு புத்துணர்ச்சியோடு திரும்பி வாங்க தலைவா என கூறி வருகின்றனர்.

rajinikanth-actor
rajinikanth-actor

Trending News