புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினி நடிக்க இருந்து ட்ராப்பான 5 படங்கள்.. சங்கர் கேட்டும் நோ சொன்ன சூப்பர் ஸ்டார்

Actor Rajinikanth: சூப்பர் ஸ்டார் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அதற்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது அவர் நடிக்கும் ஜெயிலர் படம் தொடங்கி அடுத்தடுத்த படங்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் ரஜினிகாந்த் பாதி நடித்தும் நடிக்காமலும் ட்ராப் ஆன சில படங்களும் இருக்கிறது.

அந்த வகையில் ரஜினியின் எஜமான் படத்தை இயக்கிய ஆர்.வி உதயகுமார் இயக்கத்தில் அவர் ஜில்லா கலெக்டர் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஏவிஎம் தயாரிக்கும் அப்படத்தின் பூஜை கூட போடப்பட்டு விட்டது. ஆனால் பட்ஜெட் அளவுக்கு அதிகமாக சென்ற காரணத்தால் அப்புறம் ட்ராப் செய்யப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அந்த படத்தின் ஓப்பனிங் சீன் இதுவரை எந்த ரஜினி படத்திலும் வந்தது கிடையாது.

Also read: விறுவிறுப்பான கதையை தேர்ந்தெடுக்கும் அசோக் செல்வனின் 5 படங்கள்.. போர்த் தொழிலுக்கு முன் வெளிவந்த திகில் படம்

இதை அடுத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் படத்தில் ரஜினி நடிக்க இருந்தார். அதற்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் சில காரணங்களால் ரஜினி அதிலிருந்து விலகினார். அதை தொடர்ந்து சரத்குமார் அப்படத்தில் நடித்திருந்தார். மேலும் சூப்பர் ஸ்டாரின் மகள் சௌந்தர்யா இயக்கத்தில் சுல்தான் தி வாரியர் படத்திலும் அவர் நடிக்க இருந்தார்

அனிமேஷன் முறையில் உருவாக இருந்த படமும் டிராப் ஆனது. அதைத்தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது. ஆனால் அந்த படத்திற்காக சங்கர் முதலில் ரஜினியை தான் கேட்டாராம்.

Also read: பொங்கலுக்கு 3 முக்கிய படங்களை பார்த்து ஒதுங்கிய இந்தியன் 2.. ரிலீஸ் செய்தியை லாக் செய்த உதயநிதி

ஆனால் சில அரசியல் பின்னணி இருந்த காரணத்தினால் ரஜினி அதில் நடிப்பதற்கு தயங்கி இருக்கிறார் அதன் பிறகு வேறு சில நடிகர்களிடமும் பேசப்பட்டு இறுதியில் அர்ஜுன் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ரஜினியால் அர்ஜுனுக்கு பெரும் புகழ் கிடைத்தது.

இதை அடுத்து மீண்டும் சங்கர் தன்னுடைய ஐ படத்தில் ரஜினியை நடித்த கேட்டிருக்கிறார். ஆனால் அந்த கேரக்டரில் மிகவும் சிரமப்பட்டு நடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் ரஜினி மறுத்து இருக்கிறார். ஏனென்றால் அப்படத்திற்காக விக்ரம் உடல் எடையை குறைத்து எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த காரணத்தினாலேயே சூப்பர் ஸ்டார் இதில் நடிக்க மறுத்துவிட்டார். இவ்வாறாக இந்த ஐந்து படங்களையும் ரஜினி மிஸ் செய்திருக்கிறார்.

Also read: ஒருவேளை சோறு கூட போடாத ரஜினி.. அவர் கூட விஜய்யை கம்பேர் பண்ணாதீங்க, சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

Trending News