வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பத்து வருஷத்திற்கு படங்களை புக் செய்த ரஜினி.. 83 வயசு வரைக்கும் பிசி தான்

Actor Rajini: ரஜினி ஒரு காலம் வரைக்கும் வருஷத்திற்கு ஒரு படங்கள் மட்டுமே நடித்து வந்தார். ஒரு படத்தை முடித்த பிறகு தான் தன்னுடைய அடுத்த படத்தில் கமிட்டாகி வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் அண்ணாத்த படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அடுத்ததாக நெல்சன் கதையை கேட்டு அந்த படத்தில் புக் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் ஜெயிலரின் வெற்றிக்குப் பிறகு படு பயங்கரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார். அதாவது இப்போதைக்கு ரஜினியின் கைவசம் ஐந்து படங்கள் இருக்கிறது. அவ்வாறு வருஷத்திற்கு ஒரு படம் என்று வெளியிட்டாலும் கண்டிப்பாக 5 வருடங்களுக்கு தொடர்ந்து ரஜினியின் படங்கள் ரிலீஸ் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த வகையில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக எடுத்துக்கொண்டால் லோகேஷ் தலைவர் 171 படத்தை எடுக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் 2 படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.

Also Read : ஜெயிலர் அலை ஓய்ந்தும் மாறனுக்கு வாரி கொடுத்த ரஜினி.. தலைகீழாக நின்னாலும் தொடக்கூட முடியாத டிஆர்பி

அடுத்ததாக தலைவர் 173 மற்றும் 174 படங்கள் கௌதம் மேனன் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. இந்த ஐந்து படங்கள் போக அடுத்ததாக 5 இயக்குனர்கள் இடம் ரஜினி கதை கேட்டு வைத்திருக்கிறாராம். ஆகையால் 83 வயது வரைக்கும் தனது ரஜினி கணக்கு போட்டு வைத்து விட்டார்.

அண்ணாத்த படம் வரைக்கும் சம்பளத்தை கம்மியாக பெற்று வந்த ரஜினி தலைவர் 171 படத்திற்கு கிட்டத்தட்ட 280 கோடி சம்பளம் பெறுகிறார். இன்னும் இரண்டு, மூன்று படங்களிலேயே அவரது சம்பளம் 500 கோடியாக மாறினாலும் அதில் ஆச்சரியப்படுவதில்லை. அதோடு மட்டுமல்லாமல் விஜய் சிறிது காலம் படங்களில் நடித்துவிட்டு அரசியலில் இறங்க ஆர்வமாக இருக்கிறார்.

அப்படி விஜய் அரசியலுக்கு போனால் அவருடைய படங்கள் வெளியாவது குறையும். அஜித்தை பற்றி சொல்லவே வேண்டாம் இப்போது வரை விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மிகவும் மெதுவாக சென்று கொண்டிருக்கிறது. ஆகையால் ரஜினியின் கொடி தான் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் பறக்கும் என கூறப்படுகிறது.

Also Read : சிகரெட் பிடிப்பதில் ரஜினியை மிஞ்சிய 5 ஹீரோயின்கள்.. போட்டோவுடன் சிக்கிய நயன்

Trending News