வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

போட்டி போடும் ரஜினியின் வாரிசுகள்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் சூப்பர் ஸ்டார்

Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவருமே சினிமாவில் பணியாற்றி வருகிறார்கள். அப்பா இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும் ஏதாவது கண்டிப்பாக சாதிக்க வேண்டும் என்று தற்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் 3 படத்தின் மூலம் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். இன்று ரிலீஸாகி உள்ள இந்த படத்தில் ரஜினி கேமியோ தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதுவும் ஐஸ்வர்யா விரும்பி கேட்டுக் கொண்டதன் காரணமாகத்தான் ரஜினி இதில் நடிக்க சம்மதித்தார் என்று கூறப்பட்டது.

அதுவும் ரஜினியால் தான் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இப்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி இருக்கிறது. அக்காவுக்கு போட்டியாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது ஒரு படத்தை இயக்கப் போகிறார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உள்ள நிலையில் ரஜினியும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்று சௌந்தர்யா கேட்டுக் கொண்டுள்ளாராம்.

Also Read : மகளை நம்பிய ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்.. லால் சலாமால் ஏற்பட்ட வேதனை

ஜெயிலர் படத்தால் இப்போது தான் ரஜினியின் மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. லால் சலாம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறதா என்பது இன்று தான் தெரியவரும். அதற்குள் சௌந்தர்யாவும் போட்டி போட்டுக் கொண்டு ரஜினியை தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சௌந்தர்யா இயக்கும் படத்தில் அனிருத் வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்களாம். இப்போது அவரது ஆட்டிட்யூட் சரியில்லை என்றும் அதற்கு பதிலாக யுவன் சங்கர் ராஜாவிடம் பேச உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருக்கிறார்.

Also Read : விஜய், அஜித்தால் குஷியில் ஓடிடி.. தியேட்டர்களை காப்பாற்ற ஓவர் டைம் பார்க்கும் ரஜினி, கமல்

Trending News